உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க ஆளி விதையை வயன்படுத்துங்கள் ! இந்த வழிமுறைகள் மற்றும் உணவுக் குறிப்புகள் மூலம் ஆரோக்கியமான தலை முடி வளர்ச்சியை பெறலாம் !

0

ஆளி விதை சிகிச்சை:

முடி வளர்ச்சிக்கு நாம் சில விஷயங்களை தொடர்ந்து செய்தாக வேண்டும். அடிக்கடி நுனி முடியை வெட்டி விடுவதும் முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஆனால் இத்தகைய முடி வளர்ச்சியை வேகப்படுத்த சில காரியங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான ஒரு விஷயம் தான்.

ஆம், அழகு நிலையங்களில் கூட இதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றது. ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. மேலும் ரசாயனப் பொருள் சேர்க்கையினால் ஏற்படும் முடி வளர்ச்சி நீடித்த ஆயுளைப் பெறுவதில்லை. மேலும் அவற்றால் சில பக்க விளைவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

தலைமுடி வளர்ச்சி

வீட்டில் நம்மிடம் இருக்கும் இயற்கையான பொருட்கள் கொண்டு இந்த முடி வளர்ச்சியை வேகப்படுத்த முடியும் என்றால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்? அப்படி ஒரு சிகிச்சை தான், ஆளி விதை சிகிச்சை. ஆம், ஆளி விதை மூலம் முடி வளர்ச்சியை வேகப்படுத்த முடியும். எப்படி ஆளி விதையால் முடி வளர்ச்சியை விரைவாக்க முடிகிறது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ சத்து வலிமையான அன்டி ஆக்சிடென்ட் கொண்டது. இதனால் உச்சந்தலை மற்றும் முடி சேதமடைவது தடுக்கப்படுகிறது. வேர்கால்களின் தரத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இளநரையை தடுப்பதில் வைட்டமின் ஈ சத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

pH அளவு

ஆளி விதைகள் உச்சந்தலையின் pH அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் சமச்சீரான எண்ணெய் உற்பத்தியை தர உதவுகிறது. தலை முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள் இவை. ஆளி விதைகள் உச்சந்தலையை மென்மையாக்கி , கொழுப்பு சுரப்பிகளை அமைதிப்படுத்த உதவுகின்றன, எனவே அவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்காக சரியான எண்ணை உற்பத்தி செய்கின்றன.

தலைமுடி புத்துணர்ச்சி

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக திகழ்வது ஆளி விதைகள். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு, இந்த கொழுப்பு அமிலங்கள் மிகவும் அவசியம். வேர்கால்களுக்கு புத்துணர்ச்சி தந்து, துளைகளுக்கு வலிமை தந்து, சேதமடையாமல் இருக்க உதவுகிறது. இதனால், புதிதாக வாளரும் முடி வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வளருவதில் தடை ஏற்படுவதில்லை. முடியின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உதவுகிறது.

கண்டிஷன் செய்கிறது

முடியை எளிதில் நிர்வகிக்கும் விதத்தில் மென்மையாக மிருதுவாக மாற்றுகிறது. மேலும் முடியை கண்டிஷன் செய்ய உதவுகிறது. சரும துளைகள் ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது. இதனால் ,முடி உடைவது, நுனி முடி வெடிப்பது, முடி வறண்டு போவது , சுருளுவது போன்ற பாதிப்புகள் கட்டுபடுத்தப்படுகிறது.

உச்சந்தலை

ஆளி விதைகளின் வழக்கமான பயன்பாடு, அல்லது உட்கொள்வது, கடுமையான முடி இழப்பு, உச்சந்தலையில் அரிக்கும் தோலழற்சி, மற்றும் தலை பொடுகு போன்ற சிக்கல்களைத் தடுக்கிறது. ஆளி விதைகள் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்தின் ஆதாரமாக இருக்கின்றது. இதனை மேல்புறமாக தடவுவதுடன், இந்த விதைகளை சாப்பிடுவதால் கூட, முடி வளர்ச்சி அதிகரிக்க பல நன்மைகளைச் செய்கிறது.

ஆளி விதை தலைமுடி எண்ணெய்

தேவையான பொருட்கள்:

2 ஸ்பூன் ஆளிவிதை எண்ணெய்

செய்முறை

ஆளிவிதை எண்ணெய்யை அடுப்பில் சில வினாடிகள் சூடாக்கவும்.

பின்பு, அதனை எடுத்து, உங்கள் உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். தலை முழுவதும் மசாஜ் செய்து முடித்தவுடன், சூடான நீரில் ஒரு டவலை முக்கி எடுத்து பிழிந்து கொள்ளவும்.

இந்த டவலை உங்கள் தலையில் சுற்றி கட்டிக் கொள்ளவும். இந்த டவலை ஓவனில் வைத்து அல்லது ட்ரையர் பயன்படுத்தி கூட சூடாக்கலாம்.

டவலை சுற்றியபடி அரை மணி நேரம் இருக்கவும்.

பிறகு சல்பேட் இல்லாத மிதமான ஷாம்பூ மூலம் தலையை அலசவும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.

எண்ணெயின் சூடு மற்றும் டவலின் சூடு மூலமாக உங்கள் உச்சந்தையில் உள்ள வேர்க்கல்களுக்கும் துளைகளுக்கும் உள்ளே சென்று ஆளி விதை எண்ணெய் ஊடுருவுகிறது. இதனால் உங்கள் உச்சந்தலை மற்றும் முடி புத்துணர்ச்சி அடைகிறது , மற்றும் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைகிறது. சாலட் தயாரிக்கும்போது உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய ஆளி விதை எண்ணெய்யை பயனடுத்தலாம்.

ஆளி விதை ஹேர் ஜெல்

தேவையான பொருட்கள்

1/4 கப் ஆளி விதை
2 கப் வடிகட்டிய நீர்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஆளி விதையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இந்த கலவை அடர்த்தியாக வரும் வரை கொதிக்கட்டும். பிறகு இந்த கலவையில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.

ஜெல் போன்ற வடிவத்திற்கு இந்த கலவை வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும். பின்பு இதனை குளிர வைக்கவும். குளிர்ந்த பின், வடிகட்டி அந்த ஜெல்லை ஒரு ஜாடியில் போட்டு மூடி வைக்கவும். தினமும் காலையில் உங்கள் முடியை ஸ்டைல் செய்ய இந்த ஜெல்லை பயன்படுத்தவும். மேலும் இதனை தலைக்கு பயன்படுத்துவதால் முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

எத்தனை முறை

இதை இத்தனை முறை தான் பயன்படுத்த வேண்டும். வாரத்தில் இவ்வளவு நாள் தான் தேய்க்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. தலைக்கு எப்போதெல்லாம் நாம் எண்ணெய் தேய்க்கிறோமோ அப்போதெல்லாம் இந்த எண்ணெயைத் தேய்க்கலாம். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாகவோ அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தோ கூட இதை அப்ளை செய்யலாம். தினமும் இதனை பயன்படுத்தலாம்.

ஜெல் எப்படி பயன்படுகிறது?

இந்த ஜெல்லை பயன்படுத்துவதால் இதர தேவையற்ற பொருட்கள் தரையில் படிவது தடுக்கப்படுகிறது. மேலும் இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

ஆளி விதையை உங்கள் உணவில் எப்படி சேர்த்துக் கொள்ளலாம் ?
இந்த ஆளி விதையை எண்ணெயாக, ஜெல்லாக மேல்புறம் மட்டும் பயன்படுத்துவதால், ஒரு குறிப்பிட்ட பலன் நிச்சயம் கிடைக்கும். ஆனால் இந்த ஆளி விதைகளை உட்கொள்வதால் உடலும் புத்துணர்ச்சி அடைந்து உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. இதன் பலனாக உங்கள் முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது. வாருங்கள், இப்போது ஆளி விதைகளை எப்படி உணவில் இணைக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

அப்படியே சாப்பிடுவது

உங்களுக்கு சிற்றுண்டி தேவைப்படும் போது, ஆளி விதைகளை பச்சையாக அப்படி உண்ணுவது ஒரு சிறந்த வழியாகும். தினமும் இதனை 2 ஸ்பூன் அளவு உட்கொள்ளலாம். மேலும் சில வழிகளில் இதனை உட்கொள்ளலாம். அவை,

உங்கள் எந்த ஒரு சமையலிலும், ஒரு ஸ்பூன் ஆளி விதையை எடுத்து தூவி விடலாம். பச்சையாக அல்லது பாதி பொறித்த விதைகளை உங்கள் உணவில் சேர்ப்பதால் அதன் நன்மைகள் அதிகரிக்கிறது. சால்ட் தயாரிக்கும்போது, அதன் மேல் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை தூவி பின்னர் பரிமாறலாம்.

ஆளி விதை தூள்

ஆளி விதையை மிருதுவான தூளாக அரைத்து உங்கள் உணவில் சேர்ப்பதால் எளிய முறையில் இதனை சாப்பிடலாம். ஆளி விதையை அரைத்து தூளாக்கி, ஓர் காற்று புகாத ஜாடியில் போட்டு மூடிக் கொள்ளவும். இதனை பிரிட்ஜில் கூட வைத்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ் அல்லது எதாவது சூப் தயாரிக்கும்போது அதில் இந்த தூளை ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.

ஸ்மூதி, குக்கி, மப்பின் அல்லது பாலில் இந்த தூளை சேர்த்து தயாரிக்கலாம்.

ஆளி விதை மற்றும் யோகர்ட்

ஆளி விதை கொண்டு செய்யும் ஒரு ருசியான சிற்றுண்டி இது.

ஒரு கப் குறைந்த கொழுப்பு யோகர்ட்,
அரை கப் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி,
அரை கப் ப்ளு பெர்ரி,
2 ஸ்பூன் ஆளி விதை
ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டை
ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

முடி வளர்ச்சிக்கு எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை. ஆனால் அதன் வேகத்தை அதிகரிக்க முடியும். அதே சமயம் முடியின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே இந்த வழிமுறைகள் மற்றும் உணவுக் குறிப்புகள் மூலம் ஆரோக்கியமான தலை முடி வளர்ச்சியை பெறலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் வெறும் 10 நிமிடம் படிக்கட்டில் இப்படி செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா!
Next articleஉலக அழகியை போல மின்ன வைக்கும் பாட்டியின் அந்த காலத்து அழகு குறிப்புகள்!