ஒருவர் இறந்தபின் ஆத்மா தன்னை நினைத்து அழுபவர்களை எந்த இடத்திலிருந்து பார்க்கும்? பின் எங்கே செல்லும்?

0

ஒருவர் இறந்தபின் ஆத்மா தன்னை நினைத்து அழுபவர்களை எந்த இடத்திலிருந்து பார்க்கும்? பின் எங்கே செல்லும்?

பொதுவாக மனிதன் இறக்கும் வரை அவன் மனம் நிறைய விஷயங்களைக் கற்பனை செய்து பார்க்கும். தூரத்தில் இருக்கும் நண்பர்களோ உறவினர்களோ என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்றோ அல்லது தன்னைப் பற்றியோ நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் ஆன்மாவுக்கு உயிர் இருக்கிறது என்று சொல்லும் மனிதனுக்கு அவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எப்படி இருக்கும்? எங்கெல்லாம் பயணம் செய்ய முடியும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அதுபற்றிய உண்மை தான் என்ன?

சனாதன தர்ம சாஸ்திரம் யார் யார் எந்த தெந்த நிலையில் படைக்கப்படுகிறார். யார் யாருடைய ஆன்மா எங்கே செல்லும். யார் மேலே யார் கீழே போன்ற மதநம்பிக்கைகளைப் பற்றிப் பேசக்கூடியது. அந்த தர்ம சாஸ்திரத்தி்ல மனிதன் இறந்த பின்பு அவர்களுடைய ஆன்மாக்கள் எங்கே பயணிக்கின்றன என்பது பற்றியும் குறிப்பிடுகிறது. அதுபற்றி இங்கே பார்ப்போம்.

மனிதர்கள் உயிர் வாழும் போது மட்டுமல்ல அவர்கள் இற்நத பின்பும் கூட மனித உடல்கள் தான் இறக்கின்றனவு ஒழிய ஆன்மாக்கள் அழிவதில்லை. ஆன்மாக்களுக்கு உயிர் உண்டு என்று தான் சொல்லப்படுகிறது. அப்படி உயிரோடு இருக்கும் ஆன்மா உடல் இறந்த பின் என்ன தான் செய்கிறது

ஒரு மனிதன் இறந்த பின் முதல் ஒன்பது நாட்கள் அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு மிக அருகிலேயே ஆன்மாக்கள் உலாவும். குறிப்பாக முதல் மூன்று நாட்கள் நீரிலும் நான்காவது நாள் முதல் ஆறாம் நாள் வரையிலும் நெருப்பிலும் ஏழாம் நாள் முதல் ஒன்பதாம் நாட்கள் வரையில் ஆகாயத்திலும் ஆன்மாக்கள் வசிக்கும்.

இந்த ஒன்பது நாட்களும் ஆன்மாக்கள் வெறுமனே உலவுவதில்லை. தான் இறந்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் தன்னுடைய வீட்டுகு்கு யாரெல்லாம் துக்கம் கேட்க வருகிறார்கள் என்று பார்த்து கொண்டே இருக்குமாம்.

அப்படி ஒன்பது நாட்கள் நோட்டமிட்டு விட்டு பத்தாவது நாளில் அந்த ஆன்மாவின் ஜீவன் தன்னுடைய வீட்டுக்கு வருகிறது. அதனால் தான் பத்தாவது நாள் செய்யப்படும் காரியம் மிக முக்கியமானது என்று இந்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

தான் வாழ்ந்த வீட்டுக்குள் பத்தாம் நாள் அடியெடுத்து வைக்கிற ஆன்மாவின் ஜீவன் 11 ஆம் நாள் மற்றும் 12 ஆம் நாட்களில் நாம் வைக்கின்ற எள் கலந்த பிண்டங்களை ஏற்றுக் கொண்டு உண்ண ஆரம்பிக்கிறது.

12 ஆம் நாள் பிண்டத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் 13 ஆம் நாள் தான் எமனின் காவலர்களான கிங்கரங்கள் என்று அழைக்கப்படுவோர் கயிற்றினால் இந்த ஆன்மாவை கட்டி இழுத்துக் கொண்டு செல்லும். அப்போது ஆன்மா தான் வாழ்ந்த வீட்டை பார்த்துக் கதறி அழுமாம்.

வீட்டை விட்டு செல்லும் ஆன்மா ஒரு நாளைக்கு இரவு, பகல் சேர்த்து 247 காத தூரம் அளவுக்குப் பயணிக்குமாம். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் ஆன்மாக்களுக்கு பசிக்கும் என்பதால் மாதத்தில் ஒரு நாள் எந்த திதியில் அந்த ஜீவன் இறந்ததோ அந்த திதியன்று மட்டும் ஓய்வு கொடுக்கப்படுமாம்.

அப்படி பசி எடுக்கும்போது யார் பிணடமளித்து பசி தாகம் தீர்க்கிறார்களோ அவர்களை அன்மா வாழ்த்தும். அதனால் தான் வீட்டில் பெரியவர்கள் இறந்த திதியன்று படையல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதேபோல் இறந்த முதல் பனிரெண்டு மாதங்களும் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் அவர்கள் இறந்த திதியன்று மகாபிண்டம் வைத்து வழிபட வேண்டும். 12 மாதங்கள் வரை ஆன்மாக்களின் பயணம் தொடரும். அதன்பின் ஆன்மா எமலோகத்தை அடையும். இறந்த ஆன்மா ஒரு வருடம் பயணம் செய்யும்.அதனால் தான் பொதுவாக இறப்பு நடந்த வீட்டில் ஒரு ஆண்டு வரை எந்தவித கொண்டாட்டங்களும் சுப காரியங்களும் செய்வதில்லை.

இப்படி பயணம் மேற்கொண்டு எமாகத்தை அடைந்த பின்னர் தான் அந்த ஆன்மா சொர்க்கத்துக்குப் போகுமா நரகத்திற்கா என்று தீர்மானிக்கப்படுகிறது. அது அவரவர் பாவக் கணக்கைப் பொறுத்தது. பாவம் செய்த ஆத்மாவாக இருந்தால் எமபுரத்திற்குள்ளும் அதுவே புண்ணியம் நிறைய செய்த ஆத்மாவாக இருந்தால் அது எம லோகத்திற்கும் செல்லும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகனவுல பொண்ணுங்க வராங்களா? நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது !
Next articleஉங்கள் வாழ்க்கை நரகமாக காரணம் நீங்கள் சாதாரணமென நினைத்து செய்யும் இந்த செயல்கள்தான்!