அக்குள் பகுதி ரொம்ப கருப்பாக இருக்குதா? கவலை வேண்டாம் எலுமிச்சையுடன் இதை சேர்த்து அக்குளில் தடவுங்கள்!

0

அக்குள் பகுதி ரொம்ப கருப்பாக இருக்குதா? கவலை வேண்டாம் எலுமிச்சையுடன் இதை சேர்த்து அக்குளில் தடவுங்கள்!

பொதுவாக வியர்வை, காற்றோட்டம் இன்மை, இறந்த கலங்களின் படிவு, முடியை அகற்றுதல், இரசாயணப் பொருட்கள் அடங்கிய கிறீம் வகைகளை பயன்படுத்தல், அல்ககோல் உள்ள டியோரண்ட் பயனப்டுத்தல் மற்றும் அதிகப்படியான உடல் எடை, ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை, சில மருந்துகளின் பயன்பாடு, புற்றுநோய் போன்ற பல்வேறுபட்ட காரணங்களினால் அக்குள் பகுதிகளில் கருமை நிறமடையலாம்.

எனவே முதலில் அக்குள் பகுதியின் கருமை நிறத்திற்குரிய சரியான காரணத்தை கண்டறிந்து, அதன் பின்னர் சிகிச்சை அளிப்பதே மிகவும் சரியானது. அந்தவகையில் அக்குள் பகுதியின் கருமை நிறத்தினை போக்குவதற்கு எலுமிச்சையினைப் பயன்படுத்தக் கூடிய பல்வேறுபட்ட சிறப்பான இயற்கையான வழிகள் பற்றி நோக்குவோம்.

எலுமிச்சை சாறு.

எலுமிச்சை சருமத்தை சுத்தம் செய்வதுடன், பக்டீரியா போன்ற தொற்றுக்கலில் இருந்தும் தீர்வைப் பெற்றுத்தரக் கூடியதாக உள்ளதனால், எலுமிச்சையை வெட்டி அக்குள் பகுதிகளில் தேய்த்து 10 நிமிடங்களின் பின்னர் நீரினால் கழுவிவரும் போது இறந்த கலங்கள் நீங்கி அக்குள் பகுதி பிரகாசமாக மாற்றமடையும்.

எலுமிச்சை மற்றும் சீனி ஸ்கிறப்.

ஒரு மேசைக்கரண்டி சீனி எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து அக்குள் பகுதிகளில் தேய்த்து 10 நிமிடங்களின் பின்னர் நீரினால் கழுவினால்; அக்குள் பகுதிகள் பிரகாசமாக மாற்றமடையும்.

எலுமிச்சையுடன் ஒலிவ் எண்ணெய்.

சம அளவு ஒலிவ் எண்ணெய் எலுமிச்சை சாறு சேர்த்து அக்குள் பகுதிகளில் தடவி 40 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்கள் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா! ஆண்களை அதிகளவில்..
Next articleசக்கரை நோய் இதய நோய் மற்றும் புற்று நோய் உள்ளவர்கள் பிஸ்தா பருப்பு சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்!