ஹீமோகுளோபின் குறைபாட்டால் உடலில் ஏற்படும் அசதி, உடல் வலி, சோம்பேறித்தனம், களைப்பு , ஆர்வமின்மை என்பவற்றை போக்கி ஹீமோகுளோபினை அதிகரிக்க இதை செய்யுங்க !

0
1019

ஹீமோகுளோபின் குறைபாட்டால் உடலில் ஏற்படும் அசதி, உடல் வலி, சோம்பேறித்தனம், களைப்பு , ஆர்வமின்மை என்பவற்றை போக்கி ஹீமோகுளோபினை அதிகரிக்க இதை செய்யுங்க !

அறிகுறிகள்: உடல் சோர்வு, அசதி.

தேவையானவை: முருங்கை ஈர்க்கு (குச்சிகள்).

செய்முறை:
முருங்கை ஈர்க்கை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் அசதி நீங்கும்.

அறிகுறிகள்: உடல் சோர்வு, அசதி.

தேவையானவை: மிளகு, வெல்லம், நெய்.

செய்முறை: மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல கிளறி ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும்.

உற்சாகமான உடலும், குதூகலமான மனமும் வாழ்க்கையைப் பிடிப்புடனும் நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் நகர்த்திட மிக மிக அத்தியாவசியம். இவற்றைச் சிதைக்கும் அலுப்பு, சோர்வு ஆகியவை உடல் மற்றும் மனதின் நோய்களாகவும் இருக்கக்கூடும்.

அறிகுறிகள்: அதிக சோம்பல், தளர்ச்சி.

தேவையானவை: நெய், வெங்காயம்.

செய்முறை: நெய்யில் வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அசதி நீங்கும்.

ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கு எளிய வழி

இரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 தொடக்கம் 18 கிராம் அளவி லும், பெண்களுக்கு 12 தொடக்கம் 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் போது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுகிறது. இரத்தத்தில் எவ்வளவு ஹீமோ குளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோ பின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் போது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழங்கள் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீரில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழு வதும் ஊற விடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கிவிட்டு, காலை ஒருபழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறியநீரை குடியுங்கள்.

1-வது நாள் 1, 1, 1, -3.

2-வது நாள் 2, 2, 2, = 6.என்னும் வீதத்திலும்

3-வது நாள் 3, 3, 3, = 9.என்னும் வீதத்திலும்

4-வது நாள் 4, 4, 4, = 12.என்னும் வீதத்திலும்

5-வது நாள் 4, 4, 4, = 12.என்னும் வீதத்திலும்

6-வது நாள் 4, 4, 4, = 12.என்னும் வீதத்திலும்

7-வது நாள் 3, 3, 3, = 9.என்னும் வீதத்திலும்

8-வது நாள் 2, 2, 2, = 6.என்னும் வீதத்திலும்

9-வது நாள் 1, 1, 1, = 3.என்னும் வீதத்திலும்

ஒன்பதுநாட்கள் செய்து முடித்தபிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்க ள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில்ஹீமோ குளோபின்கள் திருப்தியான அளவில் உய ர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: