வைரலாகும் புகைப்படம், விஐபி அமுல் பேபிக்கு அடித்த லக். அதுவும் மணிரத்னம் படத்தில்!

0

வைரலாகும் புகைப்படம், விஐபி அமுல் பேபிக்கு அடித்த லக். அதுவும் மணிரத்னம் படத்தில்!

தனுஷ் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த படத்தை எழுதி, இயக்கியவர் வேல்ராஜ் ஆவார். அதுமட்டுமில்லாமல் இந்த படமே இவர் ஆவார். முதல் படம் ஆகும்.அதோடு இவர் இயக்கிய முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன்,அமிதேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை தனுஷ் அவர்கள் தான் தயாரித்தது உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தனுஷின் 25 வது படமாக வேலையில்லா பட்டதாரி அமைந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பைப் பெற்றது. அதோடு இந்த படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல பெயரை வாங்கியது.

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்து உள்ளார் அமிதேஷ். இவர் ஒரு தென்னிந்தியர் நடிகர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில்உள்ள படங்களில் நடித்து உள்ளார். இதோடு இவர் ஆங்கிலப் படங்களிலும் கூட நடித்து உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. சினிமா துறையில் மிக பிரபலமான இயக்குனர் மணி ரத்னம். அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் மணிரத்தனம் அவர்களின் செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொண்டு உள்ளது. இந்நிலையில் மணிரத்தினம் அவர்கள் ‘வானம் கொட்டட்டும்’ படத்தை தயாரித்தும் வருகிறார்.

மேலும்,மணி ரத்னம் தயாரிப்பில் ‘படைவீரன்’ படத்தின் இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தில் விக்ரம்பிரபு, மடோனா செபாஸ்டியன் நடித்து உள்ளார்கள். மேலும்,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் விக்ரம் பிரபுவின் சகோதரியாக நடித்து உள்ளார். மேலும், இவர்களின் பெற்றோர்களாக சரத்குமார், ராதிகா நடித்து உள்ளார்கள். இவர்களுடன் அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகிய நடிகர்களும் நடித்து உள்ளார்கள். மேலும், பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த ‘வானம் கொட்டட்டும்’ படம் 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் திரை அரங்கில் வெளியிட உள்ளாதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். மேலும்,இந்த படத்திற்கு ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி. இதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளராக ப்ரீதா, கலை இயக்குநராக கதிர், எடிட்டராக சங்கதமிழன் ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிந்து உள்ளனர். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்த அமிதேஷ், நடிகர் சரத்குமார் ஆகிய இருவரும் வானம் கொட்டட்டும் படப்பிடிப்பில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுலம்பும் சூப்பர் சிங்கர் வெற்றியாளர், எனக்கு அந்த இடம் கிடைத்தது வருத்தமாக இருக்கிறது!
Next articleஇறுதியில் தோல்வியை சந்தித்த இளைஞர், சிறுமியின் மனதை மாற்ற நடந்த போராட்டம்!