வைரலாகும் அபுதாபியில் டி-10 தொடரில் கலக்கிய இலங்கை வீரர்!

0

வைரலாகும் அபுதாபியில் டி-10 தொடரில் கலக்கிய இலங்கை வீரர்!

அபுதாபில் நடைபெற்று வரும் டி-10 தொடரில் இலங்கை வீரர் சீக்குகே பிரசன்ன அற்புதமாக பந்து வீசியுள்ளார்.

8 அணிகள் பங்கேற்ற டி-10 தொடர் கடந்த நவம்பர் 15ம் திகதி அபுதாபியில் தொடங்கியது. இன்று நவம்பர் 24ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும், பிராவோ தலைமையிலான மராதா அரேபியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்நிலையில், டி-10 குவாலண்டர்ஸ் அணியில் விளையாடி இலங்லை ஆல்-ரவுண்டர் சீக்குகே பிரசன்ன பந்து வீச்சில் அசத்தியுள்ளார்.

டி-10 தொடரில் நடந்த 6வது போட்டியில் நார்தன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பிரசன்ன, ஆட்ட நாயகன் விருது பெற்றார். குறித்த போட்டியில் 2 ஓவர்கள் வீசிய அவர், 7 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சீக்குகே பிரசன்ன விக்கெட் எடுத்தவுடன் ஆடும் நடனம் மைதானத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்தது, அதுமட்டுமின்றி இணையத்திலும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக டி-10 தொடரில் சிறந்த பந்து வீச்சு விகிதங்கள் பெற்றுள்ள வீரர்கள் பட்டியிலில் குவாலண்டர்ஸ் வீரர் பிரசன்ன 2வது இடத்தை பிடித்துள்ளார்.

5 போட்டிகளில் விளையாடிவுள்ள பிரசன்ன, 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 5.50 பந்து வீச்சு விகிதங்கள் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇப்படி ஒரு டெக்னிக்கை பார்த்திருக்கவே மாட்டீர்கள், யானையின் நரி தந்திரம்!
Next articleஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டியில் சுவிற்சர்லாந்தும் டென்மார்க் அணிகள் தகுதி!