வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பிரபல நடிகரை பார்வையிட சென்ற மகிந்த!

0

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பிரபல நடிகரை பார்வையிட சென்ற மகிந்த!

பிரபல நடிகர் ஜக்சன் அந்தனியை பார்வையிடுவதற்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

விபத்துச் சம்பவமொன்றில் படுகாயமடைந்து ஜக்சன் அந்தனி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஜக்சன் அந்தனியின் உடல் நிலை குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் நீண்ட நேரம் மகிந்த கலந்துரையாடியுள்ளார்.

ஜக்சன் அந்தனியை குணப்படுத்துவதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயார் எனவும் மகிந்த உறுதியளித்துள்ளார்.

திரைப்பட படப்பிடிப்பு ஒன்றின் பின்னர் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த போது அநுராதபுரம் பகுதியில் வைத்து வாகனத்தில் யானையொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, ஜக்சன் அந்தனி குணமடைய வேண்டுமென கோரி சக கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் பல்வேறு மத வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 12.08.2022 Today Rasi Palan 12-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇதை விட மோசமான காலம் ஏற்படலாம்:ஜனாதிபதி!