இந்தியாவில் விதவை பெண்ணை நகைக்காக கொலை செய்த இளைஞரை பொலிசார் சிசிடிவி கமெராவின் உதவியால் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் நிர்மலா பாய் (45). விதவையான இவர் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.
நிர்மலாவின் இரண்டு பிள்ளைகள் வெளியூரில் தங்கி வசிக்கும் நிலையில் அவர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் விமசனி ஸ்ரீகாந்த் (22) என்ற ஆட்டோ ஓட்டுனருடன் நிர்மலாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீகாந்த் அடிக்கடி நிர்மலா வீட்டுக்கு வந்தார்.
இதனிடையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஸ்ரீகாந்த் அதை சரிகட்ட நிர்மாலாவின் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தார்.
அதன்படி நிர்மலா வீட்டுக்கு வந்த ஸ்ரீகாந்த் அவரை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் நிர்மலா கழுத்தில் இருந்த செயின்கள், கையில் இருந்த வளையல்கள் மற்றும் வீட்டில் இருந்த பணத்துடன் தப்பி சென்றார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் நிர்மலா சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணையை தொடங்கினார்கள்.
அப்போது சிசிடிவியில் நிர்மலா வீட்டுக்கு ஸ்ரீகாந்த் ஆட்டோவில் வந்தது தெரிந்தது.
ஸ்ரீகாந்த் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் என்பதால் ஆட்டோவில் ரஜினிகாந்த் புகைப்படத்தை ஒட்டியிருந்தார்.
இதையடுத்து நகரில் உள்ள ஆட்டோ அனைத்தையும் பொலிசார் சோதனை செய்த நிலையில் ரஜினிகாந்த் புகைப்பட ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அதை ஓட்டி வந்த ஸ்ரீகாந்தை கைது செய்தனர். அவர் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் நிர்மலாவுக்கும் கடந்த 6 மாதங்களாக தொடர்பு இருந்தது.
அவரிடம் இருந்து திருடிய நகையை அடகுகடையில் வைத்த போது தான் அது போலியான நகைகள் என தெரிந்தது என கூறியுள்ளார்.
இதனிடையில் ஸ்ரீகாந்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் அவர்களையும் பணத்துக்காக ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
அவரிடம் பொலிசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.