வெளியானது அதிர்ச்சி தகவல்! செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்!

0

வெளியானது அதிர்ச்சி தகவல்! செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்!

செவ்வாய் கிரகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மிகப்பெரிய தூசிப் புயல் உருவாகியிருந்தமை தெரிந்ததே.

அங்கு இவ்வாறு அடிக்கடி புயல் உருவாகுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இது தொடர்பாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் தூசிப் புயல் ஆனது சுமார் 80 கிலோ மீற்றர் உயரம் வரை செல்லக்கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் அமெரிக்காவின் Nebraska மாநிலத்தின் அளவிற்கு பரந்து செல்லக்கூடியது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை 18 வருட காலமாக செவ்வாய் கிரகத்தினை சுற்றிவரும் நாசாவின் Odyssey ஆர்பிட்டரானது அங்குள்ள மேற்பரப்பு வெப்பநிலை, வளிமண்டல வெப்பநிலை உட்பட காற்றிலுள்ள மாசுக்கள் தொடர்பாகவும் தகவல்களை திரட்டி வருன்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇறந்த பின்னர் வயிற்றை கிழித்து சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி! உயிருடன் கரை ஒதுங்கிய திமிங்கலம்!
Next articleஇரண்டாம் அமைச்சரவைக் கூட்டம் இன்று, ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நடைபெறும்!