வெளிநாட்டு அழகிகள்: விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் சரவணா ஸ்டோர்!

0
418

சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரத்திற்காக அதன் உரிமையாளர் சரவணன் அருள் 6 வித்தியாசமான கெட்டப்களில் தோன்றி விளம்பரத்தில் நடித்திருப்பது பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மிக பிரபலமான கடையான சரவணா ஸ்டார் குறித்து அவ்வப்போது சில சர்ச்சையாக கருத்துக்கள் வெளியாகும்.

ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி பிஸினஸ். இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் ரீடெயில் துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ்.

இந்நிறுவனத்தில் பணியாளர்கள் அதிக நேரம் பணியாற்ற வேண்டும், முறையான ஊதியம் கிடையாது என புகார்கள் எழுவதும், அது தானகவே வந்த சுவடு இல்லாமல் போய்விடுவதும் வழக்கமான ஒன்று.

மிகக்குறைந்த விலையில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று மக்கள் மத்தியில் அறியப்பட்ட சரவணா ஸ்டோர், தற்போது கடைக்காக எடுக்கப்படும் விளம்பரம் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது.

அதற்கு காரணம், 2016 ஆம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்ட தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ். அந்தக் கடையைவிடவும் அதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம் அதிகளவில் பேசப்பட்டது.

குறிப்பாக உரிமையாளர் சரவணன் அருள் சமூகவலைதளங்களில் அதிகம் கேலி கிண்டல்களுக்கு ஆளானார். காரணம், விளம்பரத்தில் தோன்றி நடித்த நடிகைகள் தமன்னா, ஹன்சிகாவுடன் இவரும் சேர்ந்து நடனம் ஆடி தனது கடையை விளம்பரப்படுத்தினார்.

அடுத்தடுத்த விளம்பரங்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து அசத்தினார் அருள். இந்த கடை தொடங்கப்பட்டபோது, உங்கள் விளம்பரத்தை பார்த்து பலர் சிரிக்கிறார்கள் என்ற கேள்விக்கு, பதிலளித்த சரவணன் இந்த விளம்பரம் சிரிப்பதற்கு அல்லது சிந்திப்பதற்கு என்றார்.

மேலும், இவரது தந்தை சரவணன் செல்வரத்தினம் அவர்கள், தனது கடையில் ஏழை முதல் பணக்கார மக்கள் அனைவரும் பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காக, மொத்தவிலை கடைகளில் பொருட்களை வாங்காமல், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் நேரடியாக சென்று விலைகளை குறைத்து பேசி பொருட்களை வாங்கி, அதே குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்து லாபம் பெற்றார்.

ஆனால், இவர்களது மகன்களோ தற்போது பிரமாண்டம் என்ற பெயரில் விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் பணத்தினை செலவழிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விளம்பரத்தில் கடையை விட அதிக கவனம் பெற்ற சரவணன் அருள், தற்போது கோடை விடுமுறைக்காக புதிய விளம்பரத்தில் தோன்றியுள்ளார்.

ஆறு கெட்டப்பில் சரவணன் அருள், குழந்தைகள் பட்டாளம், வெளிநாட்டு அழகிகள் என டக்கரு டக்கரு பின்னணி இசையுடன் புதிய வடிவில் தோன்றியுள்ளார்.

இதற்கு முந்தைய விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது போன்று, இந்த விளம்பரமும் நல்ல ரீச் ஆகும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: