சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கடுப்பு, சிறுநீர் வெளியேறுவதில் தாமதம் இருந்தால் வெண்மிளகுட‌ன் இயற்கை தீர்வு!

0

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கடுப்பு, சிறுநீர் வெளியேறுவதில் தாமதம் இருந்தால் இயற்கை தீர்வு!

இருந்தாற்போல் , சிறு நீர் கழிக்கும்போது, அசௌகரியம் ஏற்படுகிறதா? எரிச்சல், கடுப்பு, அல்லது சிறு நீர் வெளி வெளிவராமல் இருந்தால், சிறு நீர்ப்பதையிலோ, சிறு நீர்ப்பையிலோ பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்aகும். இதற்கு டிஸ்யூரியா என்று பெயர்.

வெஜைனாவில் தொற்று ஏற்பட்டிருந்தால், சுத்தமில்லாமல் பராமரிக்கப்பட்டால், அல்லது நீர் சத்து குறைந்து போனாலோ, இது போல் பிரச்சனைகள் ஏற்படும். இந்த சிறு நீர் தொற்றிற்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.

அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர் வீட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் அதில் சிறிதளவு பசு வெண்ணை சேர்த்து குடித்து வர சிறுநீர் எரிச்சல் , மூலக்கடுப்பு ,வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்

மோர் :
புரோபயாடிக் என்று சொல்லக் கூடிய உணவுகளெல்லாம் உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது என்று அர்த்தம். அவை உடலுக்குள்ளேயே உருவாகின்றன. அவைகளின் எண்ணிக்கை குறையும்போது தீய பாக்டீரியாக்கள் உருவாகின்றன.

மோர் சிறந்த புரோபயாடிக் உணவு. அதில் பாஸ்பரஸ், கால்சியம், ரைபோஃப்ளேவின்,ஆகியவைகளைக் கொண்டுள்ளது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து, சிறு நீர் குழாயில் அல்லது பாதையில் ஏற்பட்ட தொற்றுக்களை அழிக்கிறது.

போதிய இடைவேளைகளில் மோரில் இஞ்சி மல்லி தழை போட்டு குடித்துக் கொண்டு வந்தால், ஓரிரு நாட்களில் முன்னேற்றம் காணலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் :
சிறு நீர் தொற்றிற்கு ஆப்பிள் சைடர் வினிகர் மிகச் சிறந்த மருந்து ஆகும். இது கிருமிகளுக்கு எதிராக செயல்புரிகிறது. உடலுக்கு வலிமையும் தருகிறது.

சிறு நீரகத்தில் அமில் காரத் தன்மையை சமன் செய்கிறது. ஒரு டீஸ் பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்து தினமும் குடித்தால், சிறு நீர் தொற்று குணமாகும்.

கேரட் :
கேரட் சிறு நீர்குழாயில் உண்டாகும் பேக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது. கேரட்டில் விட்டமின் ஏ உள்ளதால், அது, தொற்றினால் ஏற்படும் வலியைக் குறைக்கும். தினமும் கேரட்டை ஜூஸாகவோ, அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால், எரிச்சலிலிருந்து விடுபடலாம்.

இஞ்சி :
இஞ்சி எந்தவிதமான தொற்றினையும் சரிபடுத்தும் சிறந்த ஆற்றல் கொண்டது. அது சிறு நீர்குழாயின் தங்கும் பேக்டீரியாக்களை அழிப்பதோடு, நச்சுக்களையும் அகற்றுகிறது.

இஞ்சியை தேநீரில் கலந்து குடிக்கலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் இஞ்சியைத் தட்டி கொதிக்க வைத்து ஆறியவுடன் பருகினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவை குடித்தால் போதும் . அதிகமாக குடிக்கும்போது அசிடிட்டி உருவாகும்.

வெந்தயம் :
வெந்தயம் அமில காரத் தன்மையை சமன் செய்யும். அமிலத்தின் அளவு வெஜைனாவில் அதிகமாகும்போது, அலர்ஜி உண்டாகும். இதனால் கூட இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்.

வெந்தயம் அமிலத்தன்மையை சமன் செய்யும். அதே போல் சிறுநீர்ப்பாதையில் நச்சுக்கள் தங்கியிருந்தாலும் சிறுநீர் தொற்றிற்கு காரணமாகும். வெந்தயம் உடனடியாக நச்சுக்களை வெளியேற்றும்.தொற்றிலிருந்து காப்பாற்றும்.உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

நீர் நிறைய அருந்துங்கள் :
உடலில் சில சமயங்களில் நீர் பற்றாக்குறையினால் பேக்டீரியாக்கள் சிறு நீர்ப் பாதையிலேயே தங்கி அட்டகாசம் செய்யும். போதுமான அளவு தினமும் நீர் குடிப்பது மிக மிக அவசியம்.

சிறு நீர் தொற்று ஏற்பட்டிருக்கும்போது, நிறைய அளவு நீர் குடிக்க வேண்டும். குறைந்தது 4 லிட்டர் நீராவது குடிக்க வேண்டும். அப்போதுதான் கிருமிகள் அடித்துச் சென்று வெளியேற்றப்படும்.

இது போல் உடலுக்கு ஒவ்வாத பல காரணங்களால் உடல் நலம் பாதிக்கப்படலாம். நம் வீட்டு சமையலறையிலேயே போதிய மருத்துவ குணங்கள் நிரம்பிய பொருட்கள் உள்ளன.

வீட்டிலிருந்தபடியே இது போன்ற சிறு நீர் தொற்றிற்கு தீர்வுகளைக் காணலாம். நீங்களும் இவற்றை முயன்று பாருங்கள். சீக்கிரம் குணம் பெறுவீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதுகு வலி அதிகமா இருக்கா! அப்ப இங்க ஒரு நிமிஷம் அழுத்தம் கொடுங்க!
Next articleகொழுப்பு நீக்கப்படாத பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! ஆராய்ச்சியாளர்கள் தகவல்!