விருச்சிக‌‌ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0

விருச்சிக‌‌ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

பொதுப்பலன்கள் : ராசிக்கு 6 ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் ஆதாயம் கூடும். குடும்ப வருமானம் உயரும் புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நன்மை பயக்கும். அடிக்கடி வரும் முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துப் போவது நல்லது. வெளியூர் பயணம் ஆதாயம் தரும். ஆனி மாதம் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. செலவினங்களும் அதிகரிக்கும்.

பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வதைக் கண்டு மன நிம்மதி அடைவீர்கள். அவர்களின் மறதி – மந்தம் விலகும். மகன் அல்லது மகளுக்கு சித்திரை, வைகாசி மாதங்களில் திருமணம் கூடி வரும். சகோதர உறவுகள் உதவுவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில் நிதானம் கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு. இசை, இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. முகப்பொலிவு கூடும். குழந்தையில்லாத தம்பதிக்கு ஆவணி மாதத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

கார்த்திகை, மாசி மாதங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த ஊரில் மதிப்பு – மரியாதை கூடும். புது வீடு, வாகன வசதி ஆகியன உண்டாகும். மனதிலிருக்கும் குழப்பங்கள் தீரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய கோயில்களைப் புதுப்பிக்க முற்படுவீர்கள். பிரபலங்களது நட்பு கிடைக்கும். தக்க நேரத்தில் உதவுவார்கள். பழைய வீட்டை விற்று, புது வீடு வாங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். புதிய ஆடை – ஆபரணங்கள் சேரும். உங்களால் வளர்ந்த சிலர் உங்களை வந்து சந்திப்பதால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சில வேலைகள் உடனுக்குடன் முடிக்க புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. அக்கம் பக்கத்தாருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

குருபகவானின் பலன்கள் எவை: 14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் ராசிக்கு 4 – ல் தொடர்வதால் பணிச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். தாயாருக்கு உடல் உபாதைகள் வந்து போகும். உறவினர்கள் விஷயத்தில் தேவையின்றித் தலையிட வேண்டாம். சொத்துப் பிரச்னையில் கோர்ட், கேஸ் என்று போகாமல் சுமூகமாகப் பேசித் தீர்க்கப்பாருங்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு 3 – ல் சஞ்சரிப்பதால் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்து போகும்.

ராகு – கேதுபகவானின் பலன்கள் எவை: ஆண்டு தொடக்கம் முதல் 20.3.2022 வரை ராசிக்குள் கேது நிற்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வருடம் பிறக்கும்போது ராகு 7 – ல் நிற்பதால் கணவன் மனைவிக்குள் கசப்புணர்வு ஏற்படும். சிலருக்குத் திருமணம் தள்ளிப்போகும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை கேது ராசியை விட்டு விலகுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். உறவினர்கள், நண்பர்கள் வியக்குபடி கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

சனிபகவானின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 3 – ல் சனிபகவான் இருப்பதால் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை செயல்படாது முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும்.

வியாபாரம் எப்படி இருக்கும் : சூடு பிடிக்கும். செலவுகள் அதிகம் செய்து, அழகுபடுத்துவீர்கள். சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். புரோக்கரேஜ், ஏஜென்சி, உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். கொடுக்கல் – வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள்.

உத்தியோகம் எப்படி இருக்கும் : புதிய பொறுப்புகள் வரும். மூத்த அதிகாரி, உங்களின் அசாத்திய திறமையைக் கண்டு அதிசயிப்பார். சக ஊழியர்களுடன் இருந்த போட்டி, பொறாமை மாறும். சுமுக நட்பு உருவாகும். பதவி உயர்வு, சம்பளஉயர்வு, வருடத்தின் மத்தியப் பகுதியில் எதிர்பார்க்கலாம். கலைஞர்களின் புதிய சிந்தனைகள் பாராட்டப்படும். கிசுகிசுத் தொல்லைகள் வந்து போகும். அயல்நாடு சென்று வருவீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

ஏமாற்றங்கள், வெகுளித் தன்மை ஆகியவற்றிலிருந்து இந்தப் புத்தாண்டு உங்களை விடுபட வைத்து, காலத்துக்கு ஏற்பச் சில மாற்றங்களையும் உங்களைச் செய்ய வைக்கும்.

பரிகாரம் என்ன: பிள்ளையார்ப்பட்டியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகற்பக விநாயகரை சங்கட ஹர சதுர்த்தி நாளில் சென்று வணங்குங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதுலாம்‌‌ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Next articleதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!