விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

0
414

விருச்சிகம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

இதுவரை பாதசனியாக அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் தொல்லைப்படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் ராஜயோகம் தரும் வீடான 3-ம் வீட்டில் அமர்ந்து, திடீர் யோகங்களை வாரி வழங்குவார். எதைத் தொட்டாலும் இழுபறியாகவே இருந்த நிலை இனி மாறும். ஏமாற்றங்களிலிருந்தும் இழப்புகளிலிருந்தும் கொஞ்சம், கொஞ்சமாக விடுபடுவீர்கள். கணவருடன் நீடித்த மௌனயுத்தம் மாறும். மனம்விட்டுப் பேசுவீர்கள். சொத்தை விற்றும் பணம் வராமல் தடைப்பட்ட நிலை நீங்கும். வருங்காலத்துக்காகச் சேமிப்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினருடன் புண்ணியதலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவீர்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அரசாங்கத்தால் ஏற்பட்ட கெடுபிடிகள் விலகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். இந்த சனிப்பெயர்ச்சி திணறிக்கொண்டிருந்த உங்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: