விஜய் ரசிகர்களை விமர்சித்த சின்மயி! இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.

0

விஜய் ரசிகர்களை விமர்சித்த சின்மயி! இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.

தமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபதா. மேலும், சமீப காலமாகவே பாடகி சின்மயி குறித்து பல சர்ச்சைகளும், கருத்துக்களும் சமூக குறித்து வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது பாடகி சின்மயி குறித்து விஜய் ரசிகர்கள் பல விமர்சனங்களை இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு பாடகி சின்மயி அவர்கள் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமா திரை உலகிற்கு அறிமுகமானர். பின்பு இவர் எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டைக் கோழி போன்ற பல திரைப்படங்களில் பாடி உள்ளார். அது மட்டும் இல்லாமல் சின்மயி அவர்கள் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார்.

மேலும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதோடு சின்மயி அவர்கள் வானொலி நிகழ்ச்சியை கூட தொகுத்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து சின்மயி பாடகி மட்டும் இல்லாமல் திரைப்படத்தில் பின்னணி குரல் தருபவராகவும் இருக்கிறார். மேலும்,இவர் சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா சாவ்லாவிற்கு, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகெர்ஜிக்கு, சத்தம் போடாதே படத்தில் பத்ம பிரியாவிற்கு, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாத்திற்கு, ஜெயம் கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு, சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டிக்கு என பல கதாநாயகிகளுக்கு திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுத்து உள்ளார். குவியும் வாழ்த்துக்கள்.

அது மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த பாடல் ஆன ‘மையா மையா’ என்ற பாடலையும் சின்மயி அவர்கள் தான் பாடி உள்ளார் . இதனைத்தொடர்ந்து பாடகி சின்மயி அவர்கள் 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் வெளிவந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’96’ படத்தில் கூட இவர் பாடி உள்ளார். இப்படி தன்னுடைய வசீகரக் குரலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர். மேலும், பாடகி சின்மயி அவரது ட்விட்டர் பக்கத்தில் சமீபகாலமாகவே அவர்கள் பகிர்ந்து வரும் அனைத்து விஷயங்களும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக அவர் பகிர்ந்த விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது கூட சொல்லலாம். மேலும், பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களால் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை பற்றி சின்மயி பேசிய பேச்சு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு ஆதரவாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவர்களுக்கு உதவும் வகையிலும் செய்து வருகிறார். மேலும்,பாடகி சின்மயி அவர்கள் பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதிலும் கவிஞர் வைரமுத்து மீது கூறிய புகார் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால், அது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் சின்மயி பற்றி சில கருத்துகளை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சின்மயி அவர்கள் பதில் அளித்து உள்ளார். அது என்னவென்றால், “உங்களுக்கு ஆள் பலம், ட்ரோல் பலத்துக்குக் எல்லாம் குறைச்சல் இல்லை” என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன். பொது இடத்தில் ஸ்ரீதிவ்யாவிடம் காதலை சொன்ன நபர்!
Next articleகண்ணை மூட வைக்கும் ஷாலு ஷம்முவின் வீடியோ! பாவாடையில் பஜாடா நடனம்.