வாஸ்து சாஸ்திரத்தின் படி 12 ராசிகளுக்கும் எந்த திசையில் தலைவாசல் இருந்தால் அதிஷ்டமான வாழ்க்கை அமையும்!

0

வாஸ்து சாஸ்திரத்தின் படி 12 ராசிகளுக்கும் எந்த திசையில் தலைவாசல் இருந்தால் அதிஷ்டமான வாழ்க்கை அமையும்!

12 ராசிகள் வாஸ்து

நாம் வாழக்கூடிய வீட்டின் தலைவாசல் எந்த திசையில் அமைக்கப்பட வேண்டும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அல்லது வாடகை வீட்டுக்கு குடிபுகும் போதும் எந்த வாசல் உங்கள் ராசிக்கு உகந்தது என்பதைப் பார்த்து, அதற்கேற்றார் போல குடியேறுவது அவசியம்.

மேஷ ராசிக்காரர்கள் வீடு கட்டும் போது அல்லது வாடகை வீட்டுக்கு குடியேறும் போது மேற்கு திசையில் தலை வாசல் இருப்பது உங்களுக்கு சிறந்த பலனைத் தரும். அதே சமயம் தெய் மேற்கு திசையில் வாசல் அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ராசிக்கு பொருத்தமானது அல்ல.

கும்பம் மற்றும் மீன ராசியில் பிறந்த அன்பர்கள் வீட்டின் தலைவாசல் மேற்கு திசையில் அமைப்பது மிகவும் உகந்தது.

சிம்மம் ராசிக்காரர்கள் வீட்டு கட்டும் போது, அல்லது வாடகை வீட்டுக்கு செல்லும் போது கிழக்கு பக்கமாக தலைவாசல் அமைந்திருப்பது சிறப்பு.
அப்படி கிழக்கு திசையில் தலைவாசல் அமைந்திருப்பின் உங்களுக்குப் பொருளாதார முன்னேற்றம், செல்வம் சேருதல், சகல சம்பத்துக்கள் கிடைத்தல் போன்ற யோகம் உண்டாகும். கிழக்கு திசையில் வாசல் அமைக்க வாய்ப்பு இல்லாவிட்டால் மேற்கு திசையில் வாசல் அமைத்துக் கொள்ளலாம்.

துலாம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் கிழக்கு திசையில் தலைவாசல் வைத்து வீடு கட்டுவது உத்தமம். உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு திசையில் வாசல் அமைப்பது உகந்தது. அதேசமயம் தென் மேற்கு திசையில் அதிகளவு வாசல் ஆக்கிரமித்துவிடாதபடி பார்த்துக் கொள்வது அவசியம். தென் மேற்கு திசை வேண்டாம்.

விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு தெற்கு திசை மிகவும் சிறப்பானது. இந்த திசையில் வாசல் அமைத்தால் உங்களின் செலவ நிலை மேம்படும். மதிப்பு, மரியாதை கிடைக்கும். அனைத்தும் திருப்திகரமானதாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமேஷம் ராசிக்காரர்களே உங்களுக்கு நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியால் குருபகவான் வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை எப்படியான பலன்களை கொடுக்கப்போகிறார்!
Next articleரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியால் குருபகவான் வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை எப்படியான பலன்களை கொடுக்கப்போகிறார்!