வாய் துர்நாற்றம் போகனுமா? இத வாயில போடுங்க!

0

காலையில் தூங்கி எழுந்ததும் சிலர் வாய் மீது கைகளை கொண்டு மூடிக்கொள்வார்கள்.

காரணம் வாயிலிருந்து வரும் துர்நாற்றம்.

இது விரும்பத்தகாதது என்றாலும் எல்லோருக்கும் உண்டாக கூடியது தான்.

இந்த வாய் துர்நாற்றத்தை நொடியில் எப்படி தவிர்ப்பது என்று பார்க்கலாம்.

சோம்பு
சாப்பிடுவதற்கு சோம்பை எடுத்து வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதனால் துர்நாற்றம் வராது. ஜீரண சக்தியும் விரைவாக நடைபெறும்.

ஏலக்காய்

ஏலக்காய் அவ்வப்போது சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம் கட்டுப்படுத்த முடியும். சாப்பிட்ட பிறகோ அல்லது மற்ற சாதாரண நேரங்களில் ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறைந்து விடும்.

ஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போகனுமா? தூங்கி எழுந்ததும் இந்த ஒரு பொருள மட்டும் வாயில போடுங்க! | What Causes Bad Breath

பேக்கிங்
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து தொடர்ந்து கொப்பளித்து வந்தாலும் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறையும்.

துளசி
வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய துளசியை எடுத்து வாயில் போட்டு மெதுவாக மென்று வர மெல்ல மெல்ல துர்நாற்றம் குறைய தொடங்கும்.

எலுமிச்சை சாறு
உணவுக்கு பின்பு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொண்டால் துர்நாற்றம் வருவதை முற்றிலும் தடுக்கலாம் அல்லது ஆரஞ்சு பழத்தையும் சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொண்டால் துர்நாற்றம் வருவதை தடுக்கலாம்.

எலுமிச்சை சாப்பிடும் போது குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பற்களுக்கு சில பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேற்குறிப்பிட்டுள்ள சாதாரண எளிதான டிப்ஸ் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தாலே போதும். துர்நாற்றம் வருவதை கண்டிப்பாக கட்டுப்படுத்திவிடலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமின்சார சபை மறுசீரமைப்பு!
Next articleஇன்றைய ராசி பலன் 07.08.2022 Today Rasi Palan 07-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!