வாட்ஸ் அப்பில் புதிய பிரைவசி அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது: மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவிப்பு!

0

வாட்ஸ் அப்பில் புதிய பிரைவசி அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது: மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவிப்பு!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் பிரைவசி அம்சங்கள் தொடர்பில் மெட்டா நிறுவனம் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து அவ்வப்போது பிரைவசி அப்டேட் அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகும்போது அந்த தகவலை பிறர் அறியமுடியாத வகையில் புதிய அம்சம் கொண்டுவரப்பட இருக்கிறது.

அதே போல நீங்கள் ஓன்லைனில் இருக்கிறீர்களா என்பதை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறைக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மார்க் அறிவித்திருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல், ஒருமுறை மட்டுமே பார்க்கும்படியான செய்திகளை (view once messages) ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாதபடி புதிய அப்டேட்டை அளிக்க இருப்பதாகவும் மார்க் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இப்புதிய அப்டேட் இந்த மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை அரசின் திட்டம்: பாடசாலைகளில் ஜப்பான் மொழி!
Next articleகோட்டாபய ராஜபக்ச அடுத்து செல்லவுள்ள நாடு: வெளிவந்துள்ள தகவல்!