உங்கள் முகம் பளிச்சென்ற அழகு பெற வேண்டுமா? இதோ இயற்கையான 10 அழகு குறிப்புகள்!

0

உங்கள் முகம் பளிச்சென்ற அழகு பெற வேண்டுமா? இதோ இயற்கையான 10 அழகு குறிப்புகள்!

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பின்னர் பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

தினமும் ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவி வரும் போது முகம் பளபளப்பாகவும், மிகவும் இளமையாகவும் காணப்படும்.

தேநீரில் வடிகட்டிய பின்னர், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமடையும்.

அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வரும் போது முகத்தில் முடி வளர்ச்சி குறைந்து தேவையற்ற முடிகள் நீங்கி முகம் அழகு பெறும்.

வேப்பிலை, புதினா, சிறிதளவான மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி, அத்தூளில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்து வரும் போது, முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவி விட்டு சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், மிகவும் அழகாகவும் இலகுவான முறையிலும் வெட்ட முடியும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக காணப்பட்டால்;, கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்றும் போது எண்ணெய் பசை நீங்கி முடி நன்கு அழகு பெறும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாய்ப்பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது போல அழகு ரகசியங்களும் ஒளிந்து இருக்கின்றன!
Next articleநம் உடலில் மோதிரம் அணியும் இடத்தில் சருமம் பச்சை நிறத்தழும்பாக‌ தோன்றினால் என்ன நடக்கும் தெரியுமா?