வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை! மைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு!

0

நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ள ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று வெளியாகியுள்ள வர்த்தமான அறிவித்தல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை கலைப்பதாகவும், எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இது கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்பினர்கள் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்ற நிலையில், வழக்கு விசாரணைகள் நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் எதிர்வரும் பொது தேர்தல் குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது நாடாளுமன்ற தேர்தல் குறித்த இரண்டாவது வர்த்தமானி அறிவித்தலாகும்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது குறித்த முடிவுகள் எதுவும் தெரியவராத நிலையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வர்த்தமான அறிவித்தல் வெளியாகியுள்ளமையானது, நாளைய தினம் ஜனாதிபதிக்கு சார்பாக தீர்ப்பு வெளியாகலாம் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு! உச்சகட்ட பாதுகாப்பில் கொழும்பு!
Next articleஉச்ச நீதிமன்றில் சான்றாக மைத்திரிக்கு எதிராக திரும்பும் ஆதாரம்?