வயிற்றுவலிக்காக மருத்துவமனை சென்ற நபர்! ஸ்கேன் செய்து பார்த்து மிரண்டுபோன மருத்துவர்கள்!

0
3448

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் வயிற்றில் 116 ஆணிகள், இரும்புக் கம்பிகள், வயர், குவியல் இருந்தது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் போலோ சங்கர். 42 வயதாகும் இவர் தோட்டத் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதற்காக அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும், வயிற்றுவலி தீராததால், எக்ஸ்-ரே எடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். எக்ஸ்ரேவில் அவரது வயிற்றில் ஏதோ சில பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம், அவர் வயிற்றிலிருந்த 116 இரும்பு ஆணிகள், நீண்ட வயர், இரும்பு குண்டுகள் ஆகியவை மருத்துவர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அனில்சைனி கூறியதாவது,

பெரும்பாலான இரும்பு ஆணிகள் 6.5 செ.மீ என்கிற அளவில் இருந்தன. தொடர்ச்சியாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர, அறுவைசிகிச்சைக்குப் பிறகு இயல்பான நிலையில் உள்ளார்.இவ்வளவு இரும்புப் பொருள்களை அவர் எப்படி விழுங்கினார் என அவரின் குடும்பத்தினரிடம் கேட்டோம் அவர்களுக்கும் ஏதும் தெரியவில்லை என்றார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க! இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்!
Next articleமனிதர்களே செல்ல முடியாத இடத்தில் ப்ளாஷ்டிக் கழிவுகள்! அதிர்ச்சியில் விழிபிதுங்கும் ஆராய்ச்சியாளர்கள்!