கீல்வாதம் உள்ளவர்கள் வெள்ளரியை இப்படி சாப்பிடுங்க! ஆனா கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் அதிகம் சாப்பிடாதீங்க!

0

கீல்வாதம் உள்ளவர்கள் வெள்ளரியை இப்படி சாப்பிடுங்க! ஆனா கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் அதிகம் சாப்பிடாதீங்க!

காய்கறிகளிலேயே மிகமிக குறைவான கலோரியினைக் கொண்டதும் சத்துக்கள் மிகுந்த காயாகவும் உள்ள வெள்ளரிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை அன்றாடம் செய்கின்றனால், தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாலட்டாகவோ அல்லது அப்படியோ சாப்பிட்டு வருவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் எண்ணற்றன்.

கீல்வாதம்

வெள்ளரிக்காயை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவடைந்து கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

சருமத்திற்கு ஆரோக்கியம்

வெள்ளரிக்காயில் 95மூ நீர்சத்து உள்ளதனால் உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் இழுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பி, சருமத்தினை மெருகேற்றும்.

சிறுநீரகம் ஆரோக்கியம்

உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பேணும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க

கலோரி அதிகரிக்காமல், உடல் ஆரோக்கியமாக பேணுவதுடன்;, அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரித்து, வளர்சிதை மாற்றத்தையம் அதிகப்படுத்துகின்றது.

வயிற்றுப்புண்

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் நல்ல முன்னேற்றம் தென்படும்.

மலச்சிக்கல்

தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாக இருக்கும்.

உடல் எடை குறைக்க

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வரும்போது வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறைவடையும்.

வாய் துர் நாற்றம்

ஒரு துண்டு வெள்ளரிக்காயை 30 நொடிகள் வரை வாயில் வைத்துக் கொள்ளும் போது வாய் துர் நாற்றம் நீங்குவதுடன், வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர் நாற்றத்தை போக்கும்.

குறிப்பு

கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடும் போது அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படுவதுடன், வயிற்றில் வலியையும் ஏற்படுத்தும். மேலும், வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொண்டால், இதய அழுத்தம், ரத்த நாளங்களில் அடைப்பு, சுவாசப் பிரச்சனை மற்றும் அடிக்கடி கடுமையான தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் வெள்ளரிக்காயை அதிகளவில் சாப்பிடுவதனைத் தவிர்த்தல் நல்லது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒருவருக்கு இரத்தசோகை (அனீமியா) இருந்தால் இவ்வாறான‌ முக்கிய அறிகுறிகள் வெளிப்படும்!
Next articleதேவையற்ற தொப்பையை வேகமாக குறைப்பதற்கான சில எளிய வழிகள் இதோ!