வயதானது போன்ற‌ தோற்றத்தை போக்கவேண்டுமா! இத ட்ரை பண்ணுங்க நிச்சயம் பலன் கிடைக்கும்!

0

முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும். இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும். மேலும் உங்களது தோற்றத்தையே அது வேறுபடுத்திக் காட்டும்.

உங்களது அழகை குறைத்துக் காட்டும் இந்த முக சுருக்கங்களை நீங்கள் எளிமையாக இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி போக்கலாம். சில இயற்கை பொருட்களை ஒன்றாக கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும். இந்த பகுதியில் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி நல்ல பலனை பெறுங்கள்..!

அனைவருக்குமே பெண்களின் சருமம் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் விரைவில் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பது தெரியும். அதிலும் பெண்கள் 40 வளதை அடைந்தால் போதும், முகத்தில் சுருக்கங்கள் ஆங்காங்கு காணப்படும். அதுமட்டுமின்றி, முகத்தில் ஒருவித பழுப்பு நிறம் போன்று தோன்றும். அதே சமயம் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழந்து, முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி, பின் முகமே அசிங்கமாக இருக்கும். இவை அனைத்திற்கும் காரணம் பெண்கள் இளமையாக இருக்கும் போது, நன்கு ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சருமத்தை பராமரித்து வருவர். ஆனால் திருமணமாகிவிட்டால், சிறிது நாட்கள் அந்த பராமரிப்பு குறைந்துவிடுவதால், முகத்தில் உள்ள பொலிவானது நீங்கி, பாட்டி போன்ற தோற்றம் வெளிப்படும்.

இத்தகைய தோற்றம் ஆரம்பித்தப் பின்னரே, பலருக்கு அதனை போக்குவதற்கு அழகு நிலையம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் அவ்வாறு பணம் செலவழித்து அழகு நிலையம் செல்வதற்கு பதிலாக. வீட்டிலேயே ஒரு குட்டி அழகு நிலையத்தை ரெடி செய்து, சருமத்தை பராமரித்தால், சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் நீங்கி, இளமையோடு காணலாம். அதற்கு வேறு எந்த ஒரு விலைமதிப்புள்ள அழகுப் பொருட்களும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம். இப்போது அந்த பொருட்கள் என்ன, அதனை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

அவகேடோ

அவகேடோவில் எண்ணெய் தன்மை அதிகம் இருக்கும். எனவே இந்த அவகேடோவை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும்.

விளக்கெண்ணெய்

இது ஒரு பழங்கால முறை. அது விளக்கெண்ணெய் வீட்டில் இருந்தால், அதனை முகத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, சருமம் நன்கு மென்மையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு ஒரு நேச்சுரல் ப்ளீச். வயதான தோற்றம் வந்தால், சருமத்தில் ஆங்காங்கு பழுப்பு நிறம் காணப்படும். ஆகவே உருளைக்கிழங்கை வைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்து வந்தால், அதனைப் போக்கலாம்.

கரும்பு சாறு

கரும்பு சாறு சருமத்திற்கு மிகவும் சிறந்தது. எனவே மஞ்சள் தூளை கரும்பு சாறு ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வர, முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

அன்னாசி

அன்னாசியும் முதுமைத் தோற்றத்தை தடுக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு அன்னாசியை முகத்தில் தடவி, சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

திராட்சை

விதையில்லாத திராட்சையை அரைத்து, அதனை முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முகத்தை கழுவியதும் முகத்தை துடைக்க வேண்டாம்.

கிளிசரின்

இரவில் படுக்கும் போது, கிளிசரினை, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டருடன் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, காலையில் எழுந்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் ஒருவித பழுப்பு நிற புள்ளிகள் நீங்கி, சருமமும் மென்மையாக இருக்கும்.

தேன்

தேனைப் பற்றி சொல்லவே வேண்டாம். தேனை தினமும் முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவி வந்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். அதிலும் இதனை மறக்காமல், கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதனால் கருவளையம் நீங்கிவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை அனைத்து சருமத்தினருக்கும் மிகவும் சிறந்த ஒரு அழகுப் பொருள். அத்தகைய எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், முதுமைத் தோற்றம் நீங்குவதோடூ, ஆங்காங்கு காணப்படும் புள்ளிகளும் நீங்கும். மேலும் எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தியப் பின்னர், மாய்ச்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கம் மாறும்.

ஜூஸ் குடியுங்கள்

வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸ் அல்லது கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும். உங்களது ஆரோக்கியமும் இதனால் மேம்படும். இளமையான தோற்றம் கிடைக்கும்.

வெந்தயக்கீரை

வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை நீங்கள் மறக்காமல் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘ஏ’ இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

சந்தனம்

சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.

கடலை மாவு

சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும்.

பப்பாளி பழம்

பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம். இதனால் சரும நிறம் கூடுவதோடு, சருமம் ஈர்ப்பதமாகவும் சுருக்கங்கள் இன்றியும் இருக்கும்.

தக்காளி

அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும். உங்களது சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

வயதான தோற்றத்தைப் போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்

வயது ஆக ஆக முகத்தில் சுருக்கங்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எப்பொழுதும் அழகாக இளமையோடு இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்களா….? அதற்கு சிறந்த வழி ஆலிவ் ஆயில்.

இது உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்றும் கூட சொல்லலாம்.

  1. உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.
  2. தக்காளி தான் முதலில் வயதான தோற்றத்தை குறைக்கும் சிறந்த பொருளாக இருந்தது. ஏனென்றால் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் வயதான தோற்றத்தை குறைவாக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ற லைகோபைன் தக்காளியில் அதிகமாக உள்ளது. இந்த தக்காளியை முதலில் முகத்தில் தடவி பின் அதன் மேல் ஆலிவ் ஆயிலை பூசி மசாஜ் செய்து வந்தால், சருமமானது பொலிவோடு இருக்கும்.
  3. ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளி வருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும. மேலும் இதை உதடுகளில் தடவினால், உதட்டில் வெடிப்பு ஏற்படாமல், மென்மையாக, பிங்க் நிறத்தில் மாறும்.
  4. குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் வயதான மாதிரி காட்டும். இளம் வயதில் இருபவர்களுக்குக்கூட முகத்தில் கை கால்களில் சுருக்கங்கள் ஏற்படும். இந்த சுருக்கங்கள் அவர்கள் இளம் வயதில் இருந்தாலும் நாற்பது வயது ஆனவர்கள் போல தோற்றத்தை கொடுக்கும்.வைட்டமின் குறைபாடு மற்றும் சருமத்தின் செல்கள் அழிவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சுருக்கங்களை போக்க இயற்கையான வழிமுறைகளை செய்தாலே போதும்.

  1. முட்டை கோஸ் சாறு சிறிது ஈஸ்ட் ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்து அந்த கலவையை முகத்தில் தடவி காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்னர் கொஞ்ச நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகம் நன்கு பளபளப்பாகி சுருக்கங்களும் மறைந்துவிடும்.
  2. பழுத்த வாழைப்பழத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் நம் முகத்தில் மெதுவாக தடவி ஒரு மணி நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் மசித்த வாழைப்பழம் காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும் இதன் மூலம் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை எளிதில் போக்கி விடலாம்.
  3. தேன் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குவதற்கு ஒரு அருமையான பொருளாக இருக்கிறது. ஒரு டீஸ்பூன் தேனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடம் கழித்து நன்கு காய்ந்த பின்னர் சோடா உப்பு சேர்த்த தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.
  4. முகத்தைப் பராமரிக்க பப்பாளிப் பழம் ஒரு முக்கியமான பொருளாக இருக்கிறது. பப்பாளி பழ சாருடன் பாலை சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் நன்கு காய வைக்க வேண்டும் பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகம் பளிச்சிடும்.
  5. துளசி இலை சாறுடன் ஒரு ஸ்பூன் தேனை சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டு வர முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து விடும். மேலும் சருமத்திற்கும் நல்ல பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கும். இது போன்ற சுவாரசியமான தகவல் பெற எங்களை பின்பற்றவும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவாழைப்பழம் சாப்பிடுபவரா நீங்கள் ..? உங்களுக்கான ஓர் முக்கிய செய்தி!
Next articleசமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்கள்!