லெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- Lebanon’s capital, Beirut blast.

0
1190

லெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- Lebanon’s capital, Beirut blast.

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆகவும் காயமடைந்தவர்கள் 40000 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டின் ஜனாதிபதி மைக்கேல் ஒளன் அவர்கள் “குறித்த தொழிற்சாலைக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமற்று ஆறு ஆண்டுகளாக உர வகைகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரைட் வேதிப்பொருட்கள் ஏறக்குறைய 2750 டண் அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது” என கூறியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: