இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரித்துக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என லங்கா IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய பெட்ரோல் ஒரு லீற்றரின் விலையை 20 ரூபாயினால் அதிகரிக்குமாறு லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மனோஜ் குப்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் ஒரு லீற்றர் டீசலின் விலையை 30 ரூபாயிலும் விலை அதிகரிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை அதிகரிப்பிற்கு அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: