ரோந்து சென்ற பொலிசார்! வித்தியாசமான வாசனை, ஷட்டரை அறுத்து திறந்தபோது கண்ட காட்சி..!

0

ரோந்து சென்ற பொலிசார்! வித்தியாசமான வாசனை, ஷட்டரை அறுத்து திறந்தபோது கண்ட காட்சி..!

பிரித்தானியாவில் பொலிசார் ரோந்து சென்ற போது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஏதோ வித்தியாசமான வாசம் வருவதையிட்டு அங்கு சோதனை செய்த‌போது ஒரு கால்பந்து மைதானம் அளவில் கஞ்சா செடிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

CSO Martin Jobling என்பவர், Gateshead என்ற இடத்தில் சக பொலிசாருடன் ரோந்து சென்றுள்ளார். அப்போது ஒரு சேமிப்பகத்திலிருந்து ஏதோ வித்தியாசமான வாசனை வீசுவதை உணர்ந்து சேமிப்பகத்தின் ஷட்டரை உடைத்து பார்த்த போது கால்பந்து மைதானம் அளவிலான இடத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பதை கண்டனர்.

பின்னர் அங்கிருந்த அல்பேனிய நாட்டவர்களான Fatbardh Selimi (42), Fatlum Alija (27) மற்றும் Agim Isufi(19) என்பவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் அங்கிருந்த கஞ்சாவின் மதிப்பு 820,000 பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இல் கஞ்சா பண்னையைக் கண்டுபிடித்த பொலிசாரை மூத்த அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன‌.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகை வரலட்சுமி தன் திருமணம் குறித்து வெளியிட்ட தகவல்..!
Next articleஇன்றைய ராசி பலன் 21.05.2020 Today Rasi Palan 21-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!