ரீமேக் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள தளபதி மகன்!

தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்களில் ஒருவர் நம்ம தளபதி விஜய் தாங்க , இவரின் நடிப்பில் வெளிவரும் எல்லா படங்களும் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது என்றே சொல்லலாம்.
தளபதி விஜய்யோட மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும் படம் ஒன்று சென்ற வருடம் வெளியாகி வைரலானது. இந்தவகையில் சஞ்சய் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார் என்ற செய்தி சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.
தெலுங்கில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து முடித்துள்ள உப்பேனா என்ற திரைப்படத்தை ரீமேக் உரிமத்தை வாங்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி. அதில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார். அதில் சஞ்சய் அறிமுகமாகிறார் என்ற செய்தி கசின்ந்துள்ளது, அது உண்மையா என்பது தெரியவில்லை.
By: Tamilpiththan