ரிஷப‌ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
272

பொதுப்பலன்கள் : ராசிக்கு 12 ல் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுப விரயங்கள் அதிகரிக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். வைகாசி மாதம் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுப் போவதன் மூலன் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்.

பிள்ளைகள் உங்கள் சொல்பேச்சைக் கேட்பார்கள். அவர்களின் எதிர்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்கோபம், அலட்சியப் போக்கு மாறும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். ஆவணி மாதம் திருமணத்தை நடத்த வாய்ப்பு உள்ளது.

சகோதர உறவுகளுக்கு உதவுவீர்கள். சொத்துப் பிரச்னைகள் தீரும். தாய் வழி உறவினர்களிடையே இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் காட்டுவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மார்கழி, தை மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பொருளாதாரம் எப்படி இருக்கும் : பாதியின் நின்ற கட்டட வேலைகளை இந்த ஆண்டு முடிப்பீர்கள். புதிய சொத்துகள் வாங்கும் யோகமும் கூடிவரும். வசதியான வீட்டுக்குக் குடி புகுவீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். மதிப்பு – மரியாதை கூடும். மனப் போராட்டம் ஓயும்.

வெளிவட்டாரம் எப்படி இருக்கும் : அரசுக் காரியங்களிலிருந்த தேக்க நிலை மாறும். குலதெய்வப் பிரார்த்தனைகள், மன நிறைவு தரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். வி.ஐ.பிகளின் நட்புக் கிடைக்கும். உங்கள் மனதை வாட்டிய பிரச்னைகள் முடிவுகள் வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் உதவுவார்கள். அக்கம்பக்கத்தாருடன் இருந்த மோதல்கள் விலகும். வழக்குகள் வெற்றி அடையும்.

குரு பகவானின் அருளும் பலன்கள் என்ன: 14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 10 – ல் நுழைவதால் பணிச்சுமை அதிகரிக்கும். தேவையற்ற பழிகள் வந்து சேரும். பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளக் கடுமையாக உழைக்க வேண்டிவரும். யாரையும் நம்பி எந்தப் பணியையும் ஒப்படைக்க வேண்டாம். திடீர் பயணங்கள், வீண் செலவுகள், காய்ச்சல் ஏற்படலாம்.

ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு 9 – ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடந்தேறும்.

ராகு – கேது தரும் பலன்கள் என்ன: 20.3.2022 வரை ராசிக்குள் ராகு நிற்பதால் சின்னச் சின்ன உடல் உபாதைகள் அதிகரிக்கும். கேது 7 – ல் நிற்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் உருவானாலும் அவை நல்லமுறையில் தீரும். டென்ஷன், கனவுத்தொல்லை வரக்கூடும்.

21.3.2022 முதல் வருடம் முடியும் வரை 12 – ல் ராகு நுழைவதால் உடல்நலம் மேம்படும். கேது 6 – ல் நுழைவதால் திடீர் பணவரவு, யோகம் உண்டாகும். கடன்பிரச்னை தீரும். வழக்கு சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

சனிபகவான் அருளும் பலன்கள் எவை: 9 – ம் வீட்டிலேயே சனி பகவான் தொடர்வதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் அலைச்சல் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்கும் நீங்கள், இனி நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். லேசாகத் தலைவலி, உடல் சோர்வு வந்து நீங்கும்.

வியாபாரம் எப்படி இருக்கும் : புதிய தொடர்புகள் கிடைக்கும். நெளிவு சுளிவு தெரிந்து, லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் இருந்த மனக் கசப்புகள் விலகும். கூட்டுத் தொழிலில் ஆதரவு பெருகும். விலகிப் போன வாடிக்கையாளர்கள் விரும்பி வருவர். அயல்நாடு சென்று வந்தவர்களால் உதவி கிடைக்கும். வருடத்தின் மத்திய பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏஜென்சி, புரோக்கரேஜ், ஷேர் வகைகளில் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகம் எப்படி இருக்கும் : எதிர்ப்புகள் விலகும். முழு சுதந்திரம் பெறுவீர்கள். பணியில் நிரந்தரமாக்கப்படுவீர்கள். உயர் அதிகாரியின் அடக்கு முறை விலகும். தடைப்பட்டிருந்த பதவி – சம்பள உயர்வு தேடி வரும். வேலைப்பளு குறையும். கணினித் துறையில் பணிபுரிபவர்களுக்கு அயல்நாட்டில் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவார்கள். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். சம்பளம் உயரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். திறமை வாய்ந்த புதிய கலைஞர்கள் அறிமுகமாவார்கள்.

இந்த பிலவ ஆண்டு, உங்களுக்கு அனைத்து வசதி, வாய்ப்புகளை அள்ளித் தருவதுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் தரும்.

பரிகாரம் என்ன : திருபுவனம் அல்லது மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: