யாழ்ப்பாணத்தில் மனதை உலுக்கியுள்ள சோக சம்பவம்

0

யாழ்ப்பாணத்தில் மனதை உலுக்கியுள்ள சோக சம்பவம்:யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

14 வயதுடைய மயூரன் மதுபன் என்ற மாணவனே, இரவு கல்லூரி விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உரும்பிராயை சேர்ந்த இவர், கிளிநொச்சியில் வசித்து வந்துள்ளார்.

இதன்போது இச் சிறுவனது தாயார் இறந்த நிலையில், தந்தை மற்றும் ஓர் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தந்தையும், தந்தையின் இரண்டாம் மனைவியுமாக இச் சிறுவனை வேலணை மத்திய கல்லூரியின் விடுதியில் தங்க வைத்து, கற்பிக்குமாறு கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் கோரியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுவன் வேலணை மத்திய கல்லூரி விடுதியில் தங்க வைத்து கற்பிக்கப்பட்டு வந்துள்ளார்.

இருந்த போதிலும் சிறுவன் விடுதியில் இருந்து தப்பித்து தனது உறவினர்களிடம் சென்றதாகவும், பின்னர் அவர்கள் மீள கல்லூரியில் விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, நேற்று இரவு குறித்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவற்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரதோஷத்தை யாரெல்லாம் கடைபிடிக்க வேண்டும்.
Next articleவாழைப்பழமும், முட்டையும் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?