மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

பொதுப்பலன்கள் : குடும்பத்தில் அமைதி நிலவும். ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை இந்த குழப்பங்கள் தீரும். அம்மாவுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் தீரும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அந்த வரம் கிடைக்கும். மகன் அல்லது மகனுக்கு நல்ல வரன் அமையும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சித்திரை அல்லது ஆடி மாதங்களில் மகிழ்ச்சியான மனநிலை வாய்க்கும். சொந்த பந்தங்கள் வியக்கும்படி முன்னேற எண்ணுவீர்கள். சகோதர – சகோதரிகளின் ஆதரவு பெருகும்.

பொருளாதாரம் எப்படி இருக்கும் : வருமானத்தை அதிகரிக்கப் பாடுபடுவீர்கள். அதற்கான பலன்களும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாக இந்தப்புத்தாண்டு அமைகிறது. எதிரிகளின் சூழ்ச்சிகளை வெற்றிகொள்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்ட வாங்கப் புதிய கடன்கள் வாங்கும் யோகம் ஏற்படும். கார்த்திகை மாதத்தில் இருந்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். செலவுகளை சமாளிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மன உளைச்சல் அகலும். தன்னம்பிக்கை துளிர்விடும்.

மார்கழி, பங்குனி மாதங்களில் வீடு, மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவார்கள். நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

வெளிவட்டாரம் எப்படி இருக்கும்: புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் தேடிவரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தரிசிக்க விரும்பிய புண்ணிய தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும்.

அதிர்ஷ்டம் தரப்போகும் அதிசார குருபெயர்ச்சி:

14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குருபகவானின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு 11ல் தொடர்வதால் சாதகமான பலன்கள் ஏற்படௌம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தைரியமான முடிவெடுப்பீர்கள். சொந்த வீடுவாங்கும் யோகம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகளும் தேடிவரும். வழக்குகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

14.9.2021 முதல் 12.11.2021 வரையிலான காலகட்டத்தில் குரு 10 – ல் தொடர்வதால் மற்றவர்களின் விவகாரத்தில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணிச்சுமையும் அதிகரிக்கும்.

ராகு – கேது அருளும் பலன்கள் என்ன !

இப்போது ராகு – கேது இருக்கும் இடமும், அடுத்து பெயர்ச்சியாகும் இடமும் சாதகமில்லாததால் வருமானம் அதிகரித்தாலும் செலவுகளும் அதற்கு ஏற்ப இருக்கத்தான் செய்யும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானமும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.

சனிபகவான் தரும் பலன்கள் என்ன !

சனிபகவான் 10 – ல் தொடர்வதால் குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். குறைநிறைகளை ஆராய்ந்து அனைத்தையும் சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். பழைய சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். சாதிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

வியாபாரம் எப்படி இருக்கும் : புது முதலீடுகள் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். போட்டிகள் குறையும். பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வரிகளை முறையாகச் செலுத்துவீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவுகள் விலகும். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பங்குவர்த்தகம், கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

உத்தியோகம் எப்படி இருக்கும் : அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு ஏற்படும். விரும்பிய இடமாற்றமும் உண்டு. சக ஊழியர்கள் மதிப்பார்கள். மரியாதை உயரும். சம்பளப் பிரச்னை சுமுகமாகத் தீரும். வெளிநாட்டு நிறுவனங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரின் படைப்புகள் வெற்றிவாகை சூடும். புது வாய்ப்புகளும் கதவைத் தட்டும். உங்களின் புதிய முயற்சிகள் மக்களால் பாராட்டப்படும்.

மொத்தத்தில் இந்தப் பிலவ வருடப் புத்தாண்டு உங்களுக்கு வெற்றிகளைத் தருவதோடு பொறுப்புணர்ந்து நடக்கவும் கற்றுத்தரும்.

பரிகாரம் என்ன‌ :

சனிக்கிழமைகளில் ஶ்ரீலட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று துளசி சாத்தி வழிபாடு செய்வது மேலும் நற்பலன்களை அருளும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎட்டுத் திசைகளிலும் எப்போது புகழ் கிடைக்க வேண்டுமாயின் ஸ்ரீ நரசிம்மரை இப்படி வழிபடுங்கள் ! ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு !
Next articleரிஷப‌ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!