மேஷம் ராசிக்காரர்களுக்கான குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022 உங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் புதிய மாற்றங்கள்!
மகரத்தில் குரு இருந்த போது செய்ய முடியாத விஷயங்கள் எல்லாம், இந்த குரு பெயர்ச்சியில் செய்ய ஆற்றல் தருவார்.
குரு மற்றும் சனியின் பார்வை மேஷ ராசிக்கு 7ம் இடத்தின் மீது பார்வை செய்வதால், உங்களின் கூட்டு தொழில் நல்ல வாய்ப்பு உண்டாகும், முயற்சியும் எடுப்பீர்கள். சனி 10ல் இருப்பதால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது புத்திர காரகன் குருவின் பார்வை விழுவதால் புத்திர பாக்கியம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
மேஷ ராசிக்கு சுப காரியங்கள் கை கூடும். திருமணம் முயற்சியில் இருப்பவர்களுக்கு விரைவில் வரன் அமையும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.
உங்கள் தந்தை மூலமாக அனுகூலமான பலனும், சொத்துக்கள், நற்பெயர் கிடைத்தல் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களின் குல தெய்வ வழிபாடு அடிக்கடி செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
மார்ச் மாதம் ராகு – கேது பெயர்ச்சி ஆகும் வரை கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேஷ ராசிக்கு வாக்கு ஸ்தானமான 2ல் ராகு நீச்சம் பெற்று இருப்பதால் உங்கள் பேச்சில் கவனமாக இருப்பது அவசியம். சிந்தித்து, நிதானமாகப் பேசுங்கள். படபடப்பாக, உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதால் பிரச்னைகள் தான் ஏற்படும்.