மூக்கடைப்பு பிரச்சனையை இரண்டு நிமிடத்தில் சரிசெய்ய இதை செய்யுங்க!

0

உங்களுக்கு தெரியுமா? எமது உடலுக்கு போதுமானளவு தைராய்டு சுரப்பி சுரக்கவில்லை என்றாலும் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்பட முடியும். வைரஸ் தொற்றுக்களால், சளி, மூக்கடைப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுடன், சைனஸ் பிரச்சனைகளும் தொடரும். இவ்வாறாக உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தும் நீண்ட காலமாக மூக்கடைப்பு பிரச்சனை காணப்பட்டால் அதற்கான உரிய காரணத்தைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இயற்கை முறையில் மூக்கடைப்பு பிரச்சனையை போக்கும் சுவாசப் பயிற்சி பற்றி நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்களா?

மூக்கடைப்பு நீங்குவதற்கு முதலில் உங்கள் கைகள் மூலம் மூக்கை நன்கு அழுத்தி பிடித்து, அசௌகரியத்தை உணரும் போது, கைகளை எடுத்து விட்டு மெதுவாக மூச்சை விடுதல் அல்லது மூச்சை இழுத்து வைத்து சிறிது நேரம் நடந்து விட்டு பினனர்; ஒரு நாற்காலியில் முதுகெலும்பை வலைக்காமல் நேராக அமர்ந்துக் கொண்டு மெதுவாக மூச்சை விடுதல் அல்லது வாயின் வழியாக மூச்சை நன்றாக இழுத்து மூக்கின் வழியாக மெதுவாக விடுதல் போன்றனவும் இவ்வாறாக மீண்டும் மீண்டும் செய்து வருவதன் மூலம், மூக்கடைப்பு பிரச்சனை நீங்குவதுடன் தசைகளும் தளர்வடையும்.

மூக்கடைப்பை குணமாக்கும் வேறு வழிகள்

வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து நன்கு பிழிந்து, ஒரு நாளைக்கு பலமுறை அதனை முகத்தின் மீது 10-15 நிமிடம் வைப்பதன் மூலமும் தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி ஆகியவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வருவதன் மூலமும் நல்ல பலனைப் பெறமுடியும்.

மேலும், சிறிதளவான உப்பினை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து நன்கு கலக்கி, நீராவி மூக்கினுள் பரவுமாறு மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்சுதல் அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, அதில் 2 சொட்டு நீலகிரி தைலம் ஊற்றி 2 நாட்கள் தொடர்ந்து ஆவி பிடித்து வரும் போது மூக்கடைப்பு, சளி தொல்லை என்பன நீங்கும்.

இதனைவிட, ஒரு கப் தண்ணீரில் 2 அல்லது 3 பூண்டு பற்களைப் போட்டு, அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைத்து, அதை சில நாட்கள் தொடர்ந்து குடித்து வரும் போதும் மூக்கடைப்பில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவாஸ்து சாஸ்திர முறைப்படி ஆமையை எங்கு வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கி செழிப்பு உண்டாகும்!
Next articleஒருவருக்கு இரத்தசோகை (அனீமியா) இருந்தால் இவ்வாறான‌ முக்கிய அறிகுறிகள் வெளிப்படும்!