முற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை! இலங்கையை விட்டு வெளியேற சுவிஸ் தூதரக ஊழியருக்கு தடை!

0

முற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை! இலங்கையை விட்டு வெளியேற சுவிஸ் தூதரக ஊழியருக்கு தடை!

தான் கடத்தப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து பொலிசாருக்கு அறிக்கை அளிக்கும்வரை, இலங்கையை விட்டு வெளியேற சுவிஸ் தூதரக ஊழியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்புவின் தலைமை நீதிபதி, பொலிசாரின் கோரிக்கையின் பேரில் இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

சுவிட்சர்லாந்துக்கான இலங்கை தூதரான Karunasena Hettiarachchi, பெர்னுக்கு வந்து பிரச்சினை தொடர்பாக விளக்கமளிக்குமாறு சுவிஸ் மாகாண செயலரான Pascale Baeriswyl உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25ஆம் திகதி, கார் ஒன்றிற்குள் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு, கொழும்பிலுள்ள ஒரு தெருவில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டப்பட்ட சுவிஸ் தூதரக பெண் ஊழியர் ஒருவர், சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ள இலங்கை குடிமக்களின் மொபைல் போன் விவரங்களை அளிக்குமாறு மிரட்டப்பட்டதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் புகார் தெரிவித்திருந்தது.

இந்த விடயம் குறித்து, சுவிஸ் தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு புகார் அளித்ததோடு, முழுமையான மற்றும் விரைவான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தது.

ஞாயிறன்று, சுவிட்சர்லாந்தின் அறிக்கையில் உள்ள உண்மைகள் மீது சந்தேகம் எழுப்பிய இலங்கை வெளியுறவு அமைச்சகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், நடந்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக பொலிசார் சாட்சியங்களை விசாரித்ததோடு, உபேர் ஆவணங்கள், CCTV காட்சிகள், தொலைபேசி சான்றுகள் மற்றும் GPS தரவுகளை ஆராய்ந்ததில், சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் விடயங்களுக்கும் உண்மையில் நடந்த விடயங்களுக்கும் தொடர்பு இல்லை, என்பதற்கான ஆதாரங்களை சுவிஸ் தூதரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை, இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக அலுவலர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சுவிஸ் மாகாண செயலரான Pascale Baeriswyl, பெர்லினில் இருக்கும் சுவிட்சர்லாந்துக்கான இலங்கை தூதரான Karunasena Hettiarachchiயை, பெர்னுக்கு வந்து உண்மை நிலை குறித்து விள்ளகுமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், இலங்கை அதிகாரிகள் விசாரணையை தாமதப்படுத்துவதில் சுவிட்சர்லாந்துக்கு எந்த விருப்பமும் இல்லை என்பதை இலங்கை தூதருக்கு தெரிவித்த Baeriswyl, என்றாலும் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தனது ஊழியர்கள் தொடர்பான பிரச்சினைகளை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உரசல் முற்றிவரும் நிலையில், தான் கடத்தப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து பொலிசாருக்கு அறிக்கை அளிக்கும்வரை இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என சுவிஸ் தூதரக ஊழியருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடந்திருக்கும் என பகீர் தகவல்! லண்டனில் பல முடிச்சுகளை களைத்த டிரம்ப்!
Next articleநேருக்கு நேர் எதிர்கொண்ட பெண்ணின் கலங்க வைக்கும் வீடியோ! பாலி-யல் அடிமையாக சித்திரவதை செய்த ஐ.எஸ் தீவிரவாதி!