மீனம் ராசிக்காரர்களுக்கான விரிவான குருப்பெயர்ச்சி பலன்கள்!

0

மீனம் ராசிக்காரர்களுக்கான விரிவான குருப்பெயர்ச்சி பலன்கள்!: நல்ல அறிவாற்றலுடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குரு பகவான் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களுக்கு இருந்த வீண் செலவுகள் குறைந்து படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சற்று சாதகமாக இருந்து அன்றாட செலவுகளை எளிதில் சமாளிக்க முடியும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ள குரு 5, 7, 9 ஆம் வீடுகளை பார்ப்பதால் பிள்ளைகள் மூலம் அனுகூலம், நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்லது நடக்கும் வாய்ப்பு வரும் நாட்களில் உண்டு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும்.

சர்ப கிரகங்களான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள், கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்றாலும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக இருப்பது சிறப்பு. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உங்கள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி வரும் 17-01-2023 வரை சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெற்று உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

செய்யும் தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அபிவருத்தியை பெருக்கி கொள்ள முடியும். போட்டி பொறாமைகளை சமாளித்து உங்களின் தனி திறனால் ஏற்றங்களைப் பெறக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய யக்திகளை பயன்படுத்தி சமுதாயத்தில் நல்ல நிலையை அடையும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் செயல்பட்டால் லாபகரமான பலன்களை பெறலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஏற்றமான நிலை உண்டாகும். உங்களின் உழைப்பிற்கான பலனை வரும் நாட்களில் அடைவீர்கள். உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் அவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

வரும் 17-01-2023 முதல் திருக்கணிதப்படி சனி 12-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனி தொடங்குவதால் அக்காலத்தில் எதிலும் சிக்கனமாக இருப்பது உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு உணவு உன்பது நல்லது. சில நேரங்களில் நிதானம் இல்லாமல் செயல்பட்டு வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்ளும் நேரம் என்பதால் எதை செய்வது என்றாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது சற்று கவனமாக செல்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சில நேரங்களில் வீண் வாக்கு வாதங்களால் நிம்மதி குறைவு ஏற்படும். சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்வீர்கள். புத்திரர்களால் மகிழ்ச்சி ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேற்றி கொள்ள எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலமானப் பலனை பெற முடியும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது பொறுமையுடன் செயல்பட்டால் நன்மை கிடைக்கும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் பல பேரின் விரோதத்தை சம்பாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகளும் வெளி வட்டார நட்புகளும் ஓரளவுக்கு நன்மையளிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனால் ஆதாயம் சற்று குறைவாக இருக்கும். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் சில நேரங்களில் அலைச்சல்களை ஏற்படுத்த கூடும் என்பதால் எது நல்லது எது கெட்டது என்பதை ஆராய்ந்து செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதப்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து நிலைமையை சாமர்த்தியமாக சமாளிக்க முடியும்.

உத்தியோகம்

பணியில் படிப்படியான வளர்ச்சியை பெறுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். என்ன தான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெற முடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைத்தாலும் ஊதிய உயர்வுகள் தாமதமாகும்.

அரசியல்

மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் சமுதாயத்தில் நல்ல நிலையை எட்ட முடியும். மறைமுக வருவாய்களால் சில பிரச்சினைகளை சந்திக்க கூடும் என்பதால் இருக்கும் சொத்துகளுக்கு சரியான ஆவணங்களை வைத்திருப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் செயல்படவும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

விவசாயிகள்

புழு பூச்சிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் பயிர் விளைச்சல் சுமாராக அமைந்து லாபம் குறைவாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலனைப் பெற முடியும். பொருளாதார நிலையில் சற்று ஏற்ற தாழ்வுகள் இருக்கும் என்றாலும் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். வேலை ஆட்கள் உதவியாக இருப்பார்கள்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள் என்றாலும் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ள அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதமாக வரும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எடுத்த பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுக வாழ்வு பாதிப்படையும் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு உங்களின் எல்லா துன்பங்களையும் மறக்க செய்யும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் வயிறு கோளாறு, மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தோன்ற கூடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பண விவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதிகள் கொடுப்பதோ பிறரிடம் எந்த பொருளையும் இரவல் வாங்குவதோ கூடாது. பணிபுரியும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவ மாணவியர்

கல்வியில் ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். கல்லூரிகளில் பயிலுபவர்கள் மனது அலைபாய கூடிய சூழ்நிலை ஏற்படும். மனதை போகின்ற போக்கில் விடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது உங்கள் முன்னேற்றத்திற்கு நல்லது. உடன் பயிலுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற முடியும்.

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசியில் சுய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இயற்கை உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டிய ஆதாயங்கள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். கடந்த கால தேக்க நிலை விலகி நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்கள் தகுதிக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் முடிந்த வரை அதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து விடுவது நல்லது. வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதும். 12-ல் சனி, 2-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் ஏற்படும். முடிந்த வரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்கள் பணியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எடுத்த பணியை தக்க நேரத்தில் முடிக்க முடியும்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குருபகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். சனி 11-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை விலகி ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக சற்று தேக்க நிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் காண முடியும். தகுதியான வேலையாட்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும், 2-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு மந்தநிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சனி 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகள் இருந்தாலும் பொருட் தேக்கம் இல்லாமல் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூர் பயணங்களில் சற்று கவனத்துடன் செல்வது நல்லது.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் ராகு, 8-ல் கேது, 12-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் நல்ல செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். இருக்கும் வாய்ப்புகளை தவறாது பயன்படுத்தி கொண்டால் விரைவில் சிறப்பான நிலையை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தூர பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.

2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9
கிழமை – வியாழன், ஞாயிறு
திசை – வடகிழக்கு
கல் – புஷ்ப ராகம் நிறம் – மஞ்சள், சிவப்பு தெய்வம் – தட்சிணாமூர்த்தி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 14.04.2022 Today Rasi Palan 14-04-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 15.04.2022 Today Rasi Palan 15-04-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!