மீண்டும் வக்ர கதியில் பெயர்ச்சியாகும் குரு பகவான் ! எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்க போகிறார் என்பதை பார்ப்போம்!

0

மீண்டும் வக்ர கதியில் பெயர்ச்சியாகும் குரு பகவான் ! எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்க போகிறார் என்பதை பார்ப்போம்!

ஜோதிடத்தில் குரு அதிர்ஷ்டத்திற்கான கிரகம் என்பார்கள். நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்தி, நல்ல நட்புகள் மற்றும் நிறைந்த செல்வம் ஆகியவற்றை நிறைவாகத் தர வல்லவர்.

தற்போது குரு வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கே செப்டம்பர் 14ம் தேதி திரும்புகிறார். கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13ம் தேதி பெயர்ச்சி ஆகியுள்ளார்.

இதனால் எந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்க போகிறார் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்

குரு பகவான் தன் நேரடி சுப பார்வைகள் 5, 7, 9 ஆகிய இடங்களுக்கு அற்புத பலனைத் தரக்கூடிய பார்வையால் பார்ப்பார். அதோடு 2, 11 ஆகிய இடங்களை தனது சூட்சம பார்வையால் நற்பலனை வழங்குவார்.

அதே சமயம் குரு தான் அமர்ந்திருக்கும் 1 (ஜென்ம ராசி), 3,4,6,8,10,12 ஆகிய இடங்களுக்குக் குறைவான நன்மை அல்லது அதிக பாதிப்புக்களைத் தருவார் எனலாம்.

குருவின் சுப பார்வை பலன்

ரிஷபம்
கடகம்
கன்னி
விருச்சிகம்
கும்பம் ஆகிய ராசிகள் அற்புத பலனை அடுத்த இரண்டு மாதங்கள் அனுபவிப்பார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மறுபுறம், மிதுனமும் தனுசு ராசியும் சுயபரிசோதனை செய்து, அடுத்த நிலைக்கு எப்படிச் செல்ல முடியும் என்று தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். சில உடல்நல பயங்களும் இருக்கலாம்; எனவே இந்த போக்குவரத்தின் போது அவர்கள் கால்விரல்களில் இருக்க வேண்டும்.

​எளிய பரிகாரம்

அருகில் இருக்கும் ஆலயங்களில் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரத்தைச் சாற்றி, சிறப்பாக வணங்கி வாருங்கள்.

இறைவனை வழிபடுவதோடு, ஆலயங்களுக்கு தேவையான நெய், நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், பால், தயிர், மலர்மாலைகள், பூக்கள் என இறைவனுக்கு உகந்த, கோயிலுக்கு தேவையான பொருட்களை உங்கள் சக்திக்கு ஏற்றவாறு வழங்கி, கோயில் கைங்கரியம் செய்யுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 15.09.2021 Today Rasi Palan 15-09-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 18.09.2021 Today Rasi Palan 18-09-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!