மிதுனம் ராசிக்காரர்களுக்கான‌ குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022 உங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் புதிய மாற்றங்கள்!

0

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

இதுவரை மிதுன ராசிக்கு அஷ்டம சனியோடு, குருவும் நீச்சமாக இருந்ததால், இதுவரை சொல்லில் அடங்காத துன்பத்தை அனுபவித்து வந்தனர்.

உங்களின் நற்பெயர் கெடுதல், அவமானம், ஆன்மிகவாதிகளுக்குச் சோதனைகள், உடல் ஆரோக்கியம் பாதித்தல், பொருளாதார பாதிப்பு என பல பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள்.

கால புருஷ தத்துவத்தின் படி குரு பகவான் 11ம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதுவரை குரு சனி பகவானின் வீடான மகரத்தில் முழு நீச்சமாக இருந்தார். தற்போது சமம் என்ற இடத்திற்கு செல்ல உள்ளார்.

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

இந்தக் காலகட்டங்களில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். அவமானங்களும் சின்னச் சின்ன விபத்துகளும் ஏற்படலாம். எனவே செயல்களில் சிறு நிதானம் தேவை. புதிய வீடுமனை வாங்கும்போது ரொம்பவே எச்சரிக்கை அவசியம். சட்டப்படியே எதையும் செய்யுங்கள். சகோதர வகையில் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. யாரோடும் வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள், தேவையற்ற பதற்றம், டென்ஷன் வந்து செல்லும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகும். வீட்டிலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களிடம் கடுமை காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் வாழ்க்கைத் துணையோடு விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். வீண் கவலைகள் மனதில் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களை வீட்டில் பேசிகொண்டிருக்காதீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் ஏற்படலாம். எதற்கெடுத்தாலும் உறவுகளோடு சண்டைக்கு நிற்காதீர்கள்.

வியாபாரிகளுக்கு:

குரு உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டைப் பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்து தேக்க நிலை மாறும். புதிய முதலீடுகளைச் செய்து போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள். பணியாளர்களால் உண்டான தொல்லை மறையும். அனுபவம் மிக்கவர்களைப் பணிக்குச் சேர்ப்பீர்கள். கடையை அழகுபடுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். பொருள்கள் விற்றுத் தீரும். மின்னணுப் பொருள்கள், பயணம், ஹார்டுவேர்ஸ் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு தேடிவரும். சக ஊழியர்களிடையே இருந்த போட்டி பொறாமை மறையும். வெளிநாட்டுப் பணி தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பணி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிசுகிசுக்கள் மறையும். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகப்படுத்துவதாக அமையும். வெற்றிவாய்ப்புகள் தேடிவரும்.

பரிகாரம்: விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவுங்கள் குறிப்பாக மாங்கல்யம் வாங்கிக் கொடுத்தால் உங்கள் வாழ்வில் செல்வ வளம் கிடைக்கும்.

குரு பெயர்ச்சியால் அற்புத பலன்களைப் பெறப்போகும் அடுத்த ராசி மிதுனம்.

ஏற்கனவே அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு, குருவின் 5ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள்.

இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் பெருமளவு குறையப்போகிறது என்று சொன்னால் மிகையல்ல.
பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, 10க்கு உடைய ராசி அதிபதி உங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களின் தேக்கங்கள் நீங்கும்.

இந்நிலையில் குரு உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அமர்வதாலும், உங்கள் ராசியை குரு 5ம் பார்வையாக பார்ப்பதால் மிகப்பெரிய வலிமையும், அதிர்ஷ்ட பலன்களும் உங்களுக்கு ஏற்படும்.
கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தல், ஆன்மிக நாட்டம் கொள்ளுதல், மகான்களின் ஆசி பெறுதல் என நன்மை உண்டாகும்.

மிதுன ராசியைச் சேர்ந்தவருக்கோ அல்லது மிதுன ராசி பெற்றோர் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற மனக்கவலையில் இருந்தால், இந்த குரு பெயர்ச்சி காலத்தில் விரைவாக நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும்.

குடும்பம்
குழந்தை வரத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். பெரியவர்களின் அருள், ஆசி கிடைக்கும்.

முன்னோர்களின் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். சொத்து வாங்குதல், விற்றல் வகையில் உங்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான முன்னேற்றங்களை அடைவீர்கள்.

ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளுக்கு வெற்றி கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்வதால் உங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பதவி கிடைக்கும்.

உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய கெளரவம் தேடிவரும்.

நீங்கள் செய்ய வேண்டியது கடின உழைப்பு மட்டும் தான்.

தொழில்
தொழில், வியாபாரத்தில் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும், உங்களுடன் இருப்பவர்களால் உங்களின் பெயர் கெடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

வேலை நிமித்தமாக சில அவமானங்கள் ஏற்படலாம். வெளிநாடு தொடர்பான தொழில், வியாபாரம், வேலைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அவர்களின் முயற்சியும், கனவும் பலிக்கும்.

இந்த காலகட்டத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் உங்களின் மகிழ்ச்சி, குடும்ப நிம்மதியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅக்டோபர் 24 முதல் 30 வரை 2021 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரத்திற்கான‌ ராசிப்பலன்!
Next articleஆ-ண் நண்பருடன் மெளனராகம் ஹீரோயின் ரவீனா கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டம் ! இவர்தான் காதலரா!