மிக்ஸி, கிரண்டரை வைத்து கேக் வெட்டிய விஜய், முருகதாஸ்!சர்கார் டீம் மீண்டும் புதிய சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது!.

0

சர்கார் டீம் வெளியிட்ட பார்ட்டி புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சர்கார் டீம் மிக்ஸி, கிரைண்டர் கேக்கில் வடிவமைக்கப்பட்டு வெட்டி ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்கள்.

வம்பு இழுக்கிறார்களா சர்கார் டீம்
பஞ்சாயத்து முடிஞ்சி போச்சி. போங்க. வீட்டுல போய் புள்ளகுட்டிகள படிக்க வைக்கிற வழியப் பாருங்க’ என்று தமிழக முதல்வரும் மற்ற அமைச்சர்களும் கூட ‘சர்கார்’ பிரச்சினையை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கக் கிளம்பிய நிலையில், ‘உங்கள அவ்வளவு லேசுல விட முடியாது பாஸ். வாங்க இன்னும் கொஞ்சம் விளையாடலாம்’ என்று வம்புக்கு இழுக்கின்றனர் சர்கார் பார்ட்டிகள்.

படம் ரீ சென்ஸார் செய்யப்பட்ட பிறகு, விநியோகஸ்தர் தரப்பு கலெக்‌ஷன் சற்று டல்லடித்ததாக புலம்பிவருகிறது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்,விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட யாருமே தங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாக பேருக்குக் கூட ஒரு அறிக்கை வெளியிடாத நிலையில் சர்கார் பிரச்சினையில் அ.தி.மு.க.தரப்பே பெரிய அளவில் ஸ்கோர் பண்ணிவிட்ட இமேஜ் மக்கள் மத்தியில் உள்ளது.

கேக் வெட்டி கொண்டாட்டம்
சர்கார் முதல் வார வெற்றியை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடும் எண்ணத்தில் நேற்று இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் ஒரு இடத்தில் சந்தித்திருக்கின்றனர். அந்த சந்திப்பு ஒரு பார்ட்டியின் ஆரம்பம் என்பது தெரிகிறது.

தளபதி விஜய் கேக் வெட்டினாரா
பார்ட்டி துவங்கும் முன்பாக ஒரு கேக் வெட்டப்படுகிறது. வில்லங்கமே அந்த கேக்கில்தான் இருக்கிறது. அந்த கேக்கைச் சுற்றி நான்கு பக்கத்திலும் இரண்டு மிக்ஸி மற்றும் இரண்டு கிரண்டர்கள் நக்கலாக வைக்கப்பட்டிருந்தன. அந்த கேக்கை வெட்டுவதற்கு வெறும் கை மட்டும் காட்டி ஒரு ஸ்டில். அந்தக் கை யாரோடது? என்று கேள்வி எழுந்தது உடனே அதற்கு ரசிகர்கள் தளபதி விஜயோடது’… என்று ஆரவாரமான பதில்கள் அளித்துள்ளனர். இப்படி நடந்து முடிந்தது அந்தப்பார்ட்டி.

இலவச மிக்ஸி, கிரைண்டர் பஞ்சாயத்து பெரிய அளவில் நடந்து முடிந்திருக்கும் வேளையில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க.வினர் அத்தனை பேரையும் நக்கலடிக்கும் இப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த பார்ட்டியின் புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார் ஏ.ஆர்.ரகுமான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article2 இளம் பெண்கள் ட்ரம்ப் வாகனம் முன்பு மேலாடையின்றி!
Next articleஉத்திரபிரதேசத்தில் கீழ்த்தரமாக மாறும் கலாச்சாரம்! 5 வயது சிறுமியை 11 வயது பையன் செய்த பயங்கரம்!