இந்த முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் பரவலாக பின்பற்றப்படும் மருத்துவ முறையாகும். மார்பகம் வீங்குதல், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை ஏற்படும் போது அதை சரி செய்ய இம்முறையை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
பயன்பெறும் முறை #1
இம்முறையை செய்யும் முன்னர் ஒரு மணி நேரம் முட்டைகோஸை ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளுமை அடைந்த பிறகு, அதன் வெளிப்புற இலைகளை உரித்து வீசி விட்டு, இரண்டாம் அடுக்கு லேயர் இலைகளை எடுத்து பயன்படுத்த வேண்டும்.
பயன்பெறும் முறை #2
இரண்டாம் அடுக்கு இலைகளை பயன்படுத்தும் முன்னர் அதை இதமான நீரில் கழுவி கொள்ளுங்கள். அந்த முட்டைகோஸ் இலைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
பயன்பெறும் முறை #3
ஸ்டெம் பகுதியை நீக்கிவிடுங்கள். இலைகளை சரியாக மார்பக பகுதியில் நிற்கும் படி வைக்க வேண்டும். முலைகாம்பு பகுதியில் மட்டும் படாதபடி பார்த்துக் கொள்ளவும்.
பயன்பெறும் முறை #4
இப்போது சுத்தமான அந்த முட்டைகோஸ் இலைகளை மார்பகத்தை கவர் செய்தது போல கட்ட வேண்டும். இதை 20 நிமிடங்கள் வைத்திருந்தால் போதுமானது. அதன் பிறகு நீக்கிவிடலாம்.
நன்மைகள்
இதை மீண்டும், மீண்டும் தொடர்ச்சியாக செய்து வந்தால், மார்பகம் வீங்குதல், இரத்த நாளவீக்கம், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை சரியாகும். உங்கள் மார்பகள் நலத்துடன் அல்லது நன்கு மாறுதல் ஏற்பட்டு இருப்பது போன்று உணரும் பட்சத்தில் இதை நீங்கள் நிறுத்திவிட வேண்டும்.