மாமனார் மீது மருமகள் புகார்!! காரணம் கழிப்பறை!!

0
800

மாமனார் மீது மருமகள் புகார்!! காரணம் கழிப்பறை!!

பீகார் மாநிலத்தில் வீட்டில் கழிவறை கட்டாத மாமனார் மீது மருமகள் புகார் கொடுத்துள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது கணவர் தமிழ்நாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவரது கணவர் வீட்டில் தங்கியுள்ள ஜோதி, கழிப்பறை கட்டுமாறு மாமானாரிடம் முறையிட்டு வந்திருக்கிறார்.

ஆனால், மாமனார் கழிப்பறை கட்டித்தராத்தால் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். கழிப்பறை கட்டினால்தான் திரும்பி வருவதாக கூறிய நிலையில், அவரது மாமனார் வீட்டில் கழிவறை கட்டாமல் தவிர்த்து வருகிறார்.

இதனால், ஜோதி தன் மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் மீது முசாபர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதியின் மாமனார் மற்றும் கணவரின் சகோதரரை அழைத்து புத்திமதி சொன்னார்கள்.

இத்துடன், விரைவில் வீட்டில் கழிப்பறை கட்டுவதாக ஜோதியின் மாமனாரிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றனர். பின்னர், ஜோதி தன் புகாரை வாபஸ் பெற்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: