மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம்,82 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த திருடனுக்கு கிடைத்தது!நடந்த சுவாரஸ்யம் !

0
854

மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம்,82 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த திருடனுக்கு கிடைத்தது!

தனியாக இருக்கிறார் என்று எண்ணி 82 வயது மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த திருடன், தனக்கு கிடைத்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார் என்றே தோன்றுகிறது! 29 வயது இளைஞர் ஒருவர் 82 வயது Willie Murphy என்ற மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தார். நியூயார்க்கில் வசிக்கும் Willieயின் வீட்டுக்குள் திருட நுழைந்த அந்த நபரை அப்புறம் பொலிசார் வந்து Willieயிடமிருந்து மீட்கவேண்டியதாயிற்று.

யாரோ ஒரு பாட்டி, தனியாக இருக்கிறார் என்று எண்ணி அந்த திருடன் வீட்டுக்குள் நுழைய, பாட்டி சர்வசாதாரணமாக ஒரு மேசையைத் தூக்கி திருடன் தலையில் அடிக்க, மேசை உடைந்துபோனது. பாவம், அந்த திருடனுக்கு பாட்டி ஒரு ‘பாடி பில்டர்’ என்பது தெரியாது. வெறும் 5 அடி உயரம் கொண்ட Willie பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், தன்னை விட இரண்டு மடங்கு எடையை சர்வசாதாரணமாக தூக்கக்கூடியவர். இந்த உண்மை தெரியாமல் அவரது வீட்டுக்குள் நுழைந்த திருடனை சாய்த்த Willie, துடைப்பத்தால் நன்றாக சாத்தி, அவரது முகம் முழுவதும் ஷாம்பூவை ஊற்றி விட்டிருக்கிறார்.

அதற்குள் பொலிசார் வர, அவர்கள் வந்து திருடனை பாட்டியிடமிருந்து மீட்டிருக்கிறார்கள். பாட்டிக்கு மருத்துவ உதவி தேவைப்படும் என்று எண்ணி வந்த மருத்துவ உதவிக்குழுவினர், திருடன் இருந்த நிலைமையைக் கண்டதும், பாட்டியுடன் ஆளுக்கொரு செல்பி எடுத்துக்கொண்டு திரும்பியிருக்கிறார்கள். நான் தனியாகத்தான் இருக்கிறேன், வயதானவள்தான் ஆனால் முரட்டுப்பெண் நான் என்கிறார் Willie.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: