இந்த‌ 10 சூழல்களில் ஏன் உற வில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்!

0

இப்படியான‌ 10 சூழல்களில் ஏன் உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்!

உறவு எல்லா உயிரினங்களுக்கும் மத்தியிலும் பொதுவானது. இனப்(பெருக்கும்) என்பது இயற்கையின் கட்டாயம். ஆனால், மனித இனத்தில் மட்டுமே உறவு என்பதை இனப்பெருக்கம் என்பதை தாண்டி, தனது ஆசையை தனித்துக் கொள்வதற்கு, அடிக்ஷன் என பல கோணங்கள் கொண்டிருக்கின்றன. உறவு இல்லாத வாழ்க்கை நிச்சயமாக நினைத்துப் பார்க்க முடியாதது தான்.

ஆனால், உறவு மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது தானே. நினைக்கும் போதெல்லாம் உறவு வைத்துக் கொள்ள விரும்புவது மனித மனம். ஆனால், எக்காரணம் கொண்டும் இந்த பத்து சூழல்களில் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்கிறது மருத்துவ உலகம். இல்லையேல் அசௌகரியம், மன வேதனை, வலி போன்றவை ஏற்பட கூடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்

ஒருவேளை துணைக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டிருந்தால், அந்த காலக்கட்டத்தில் உறவில் ஈடுபவதை தவிர்க்க வேண்டும். ஆண்டி-பயாடிக் எடுத்துக் கொள்ளும் வரையிலும் அல்லது அதிலிருந்து முழுமையாக தீர்வுக் காணும் வரையிலும் உறவை தவிர்த்தல் நல்லது.

இல்லையேல், உறவில் ஈடுபடும் போது அசௌகரியங்கள் அல்லது அதிகமான வலி ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தால், சிகிச்சையின் அளவு மற்றும் குணமடைந்து வரும் நிலையை கண்டு மருத்துவரிடம் உறவில் ஈடுபடலாமா, கூடாதா என்று கேட்டறிந்துக் கொள்ள வேண்டும்.

பி கினி வேக்ஸிங் என்று கூறப்படுவது யாதெனில், முற்றிலும் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை நீக்குதல். அதாவது பி கினி போன்ற உடை அணிந்தால் செ க் ஸி யாக தெரிய, பார்க்க அசௌகரியமாக இல்லாமல் இருக்க இதை பெண்கள் செய்வதுண்டு.

ஒருவேளை நீங்கள் அப்படியான டீப் பி கினி வாக்ஸிங் செய்திருந்தால், அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு உறவில் ஈடுபட வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த காலக்கட்டத்தில் அந் தரங்க பகுதியில் சருமம் மிகவும் மென்மையாகவும், சென்சிட்டிவாகவும் இருக்கும். சிலருக்கு எரிச்சல் உணர்வு கூட ஏற்பட்டிருக்கலாம். எனவே, இந்த நேரத்தில் உறவுக் கொள்ள வேண்டாம். இது அசௌகரியமாக தான் இருக்கும்.

கர்ப்பக் காலத்தில் முதல் ஒருசில மாதங்களில் உறவில் ஈடுபடலாம் என்று மருத்துவர்களே கூறுவார். ஆனால், இது அனைவருக்கும் பொதுவான கருத்து அல்ல. அவரவர் உடல்நிலையை வைத்து இது மாறுபடும். ஒருவேளை குழந்தை கருவில் இருக்கும் நிலை அல்லது தொப்புள்கொடி பிரச்சனை ஏதேனும் இருந்தால் உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

எனவே, நீங்கள் கர்ப்பமாக இருந்தால், செக்கப் சென்று வரும் போது, எதற்கும் மருத்துவரிடம் குழந்தையின் ஆரோக்கியம் சார்ந்து உறவில் ஈடுபடலாமா, கூடாதா என்பதை கேட்டறிந்துக் கொள்ளுங்கள்

தாம் பத்தியம் என்பது இருவரின் ஒப்புதலுடன் நடக்க வேண்டும். தாம் பத்தியத்தை ஒருபோதும் ஒருவரின் ஆசைக்காக அல்லது ஏதேனும் அட்வேண்டேஜ் எடுத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள கூடாது. ஒருவேளை உங்களுக்கும் துணைக்கும் ஏதேனும் சண்டை ஏற்பட்டால் அதை தீர்த்துக் கொள்ள, சமாதானப் படுத்த தாம் பத்தியத்தை நாட கூடாது.

அதற்கு மாறாக, உங்கள் துணையை சமாதானம் செய்துவிட்டு தாம் பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சண்டைப் போட்டுவிட்டு சமாதானப்படுத்த உறவை நாடுவது நிச்சயம் உங்கள் மீது எதிர்மறை தாக்கம் உண்டாக கருவியாக அமையலாம்.

ஒருவேளை உங்களுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருக்கிறது என்றால், நிச்சயம் சில காலம் உறவை தள்ளி வைக்க வேண்டும். சுகப் பிரசவமாக இருந்தாலும், சிசேரியனாக இருந்தாலும் இது இரண்டுக்கும் பொருந்தும். அவரவர் உடல்நிலை மற்றும் பிறப்புறுப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் அல்லது சர்ஜரி காயம் ஆறும் நிலையை வைத்து ஆறில் இருந்து எட்டு வாரங்கள் வரை உறவை தள்ளி வைக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். எதுவாக இருந்தாலும், காயம் முற்றிலுமாக ஆறிய பிறகு தான் உறவில் ஈடுபட வேண்டும்.

பெண்களுக்கு அந் த ரங்க பகுதியில் ஈஸ்ட் இன்பெக்ஷன் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை இந்த இன்பெக்ஷன் ஏற்பட்டிருந்தால், அந்த காலக்கட்டத்தில் உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

இல்லையல் உறவு கொ ள் ளும் போது வலி மற்றும் இன்பெக்ஷன் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இதனால், துணைக்கும் தொற்று பரவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, தொற்று முற்றிலும் குணமாகும் வரையிலும் தாம் பத்திய உறவை தள்ளி வையுங்கள். மேலும், மருத்துவரிடம் கலந்தாலோசித்து உறவில் ஈடுபடுங்கள்.

போதை அல்லது ஆல்கஹால் உட்கொண்ட நேரங்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். போதையில் இருக்கும் போது உறவுவைத்துக் கொள்வது நல்ல ஐடியா இல்லை என்று கூறுகின்றனர்.

பெரும்பாலும் போதையில் உறவுவைத்துக் கொண்டவர்கள் அணுகுமுறை அல்லது செயலில் கொஞ்சம் வித்தியாசமாக நடந்துக் கொள்கிறார்கள். அல்லது போதுமான அளவு பாதுகாப்பாக அல்லது சௌகரியமான முறையில் உறவுவைத்துக் கொள்வதில்லை என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சில சமயங்களில் போதையில் வைத்துக் கொள்ளும் உறவு உறவின் தாக்கம் ரேப் போன்ற வலி அல்லது அனுபவத்தை ஏற்படுத்துவதாகும் சிலர் கூறி இருக்கின்றனர்.

ஒருவேளை Pap test எனப்படும் கருப்பை / கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள போகிறீர்கள் எனில், பரிசோதனைக்கு செல்லும் 48 மணி நேரத்திற்கு முன் உறவில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காரணம், அந்த பரிசோதனையின் போது உள்ளே விந்தணு இருந்தால், பரிசோதனை ரிசல்ட் சரியாக வராது.

பாதுகாப்பின்றி உறவில் ஈடுபட்டால் தானே இப்படி, காண்டம் அணிந்து உறவுவைத்துக் கொள்ளலாமா என்றால், அதற்கும் ‘நோ’ என்கிறன்றனர் மருத்துவர்கள். ரிசல்ட் சரியாக வரவேண்டும் என்றால், தயவு செய்து இந்த பரிசோதனைக்கு 48 மணி நேரத்திற்கு முன் உறவுவைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றனர்.

பாதுகாப்பின்றி உறவில் ஈடுபடுவது என்ன பெரிய தவறா? என்று நீங்கள் கருதலாம். தவறு தான். கருத்தடை இன்றி உறவில் ஈடுபடுவதால், கருத்தரிக்கவும், பால்வினை தொற்று எளிதாக பரவுவதற்கும் நிறையவே வாய்ப்புகள் உள்ளன. எனவே, உங்கள் துணையாகவே இருந்தாலும் பாதுகாப்பான முறையில் உறவில் ஈடுபட வேண்டும். சிலமுறை அந்தரங்க பகுதியில் ஏற்படும் தொற்று கூட பரவும் அபாயம் இருக்கிறது.

மன அழுத்தம், ஆசை எதுவாக இருந்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் துணையை உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துதல் கூடாது. உறவு என்பது மனதின்பால் இணைந்து கூட வேண்டிய செயல். வெறுமென தனிநபர் கட்டாயத்தின் பேரில் கூடும் போது அது உங்கள் வாழ்வில் மற்றும் தாம் பத்தியத்தில் தீய தாக்கத்தை தான் உண்டாக்கும்.

இப்படியான உறவுஅசௌகரியமகவும், வலி மிகுந்ததாகவும், மன வேதனை ஏற்படுத்தும் அனுபவமாக தான் முடிகின்றன. இவை அந்த தருணம் என்று மட்டுமின்றி, மனதிலும், உறவிலும் ஆறாத ஒரு ஆழமான வடுவை ஏற்படுத்தி செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, கட்டாய செ க் ஸை தவிர்த்தல் நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் வெள்ளிக்கிழமை – 28.12.2018
Next articleபுத்தாண்டு பலன் – 2019 ரிஷபம்!