மது அருந்துவதாலும், புகைப்பிடித்தலாலும் ஏற்படும் இரத்தம் அசுத்தத்தை குணப்படுத்தும் இயற்கை வழிமுறைகள்!

0
886

அறிகுறிகள்: இரத்தம் அசுத்தம் அடைதல். தேவையானவை: தர்ப்பை புல்.
செய்முறை: தேவையான அளவு தர்ப்பை புல்லை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கஷாயம் செய்து குடித்தால் இரத்தம் தூய்மையாகும்.

அறிகுறிகள்: மது குடிப்பதால் ரத்தம் மாசுப்படுதல். தேவையானவை: தேன், இஞ்சிச்சாறு.செய்முறை : இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் தூய்மையடையும்.

அறிகுறிகள்: மது அருந்துவதினால் இரத்தம் கெடுதல். தேவையானவை: பருப்பு, காசினி கீரை. செய்முறை: காசினி கீரையை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்

அறிகுறிகள்: மது அருந்துவதினால் இரத்தம் மாசுப்படுதல். தேவையானவை: திராட்சை, பால், கற்கண்டு. செய்முறை: பாலில் பச்சை திராட்சையைப் போட்டு காய்ச்சி கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் தூய்மையடைந்து உடல் நலம் பெறும்.

அறிகுறிகள்: மது அருந்துவதால் இரத்தம் மாசுப்படுதல். தேவையானவை: புடலங்காய். செய்முறை: புடலங்காயை தினந்தோறும் உணவுடன் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகும்.

அறிகுறிகள்: புகைப்பிடித்தலால் இரத்தம் மாசுப்படுதல். தேவையானவை: முருங்கைக் காய். செய்முறை: முருங்கைக் காய் சூப் செய்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் தூய்மையாகும்.

அறிகுறிகள்: இரத்தம் மாசுப்பட்டிருத்தல். தேவையானவை: துளசி.
செய்முறை: துளசியை ஊற வைத்த நீரை தினசரி குடித்து வந்தால் இரத்தம் தூய்மையாகும்.

அறிகுறிகள்: புகைபிடிப்பதினால் இரத்தம் மாசுப்பட்டிருத்தல்.தேவையானவை: தேன், குங்குமப் பூ. செய்முறை : ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து தினமும் காலை உணவருந்துவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் இரத்தம் தூய்மையடையும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅகல்யை! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Akalijai!
Next articleகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kadavulum Kandhasami Pillaiyum!