மகாலட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் பதினைந்து பேறுகள்!

0

மகாலட்சுமியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

உடல் எப்பொழுதும் இளமையுடன் அழகு பெற்று ஒளிமயமாகும்.

வீட்டில் பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.

பிறர்மேல் உண்டான தீராத பகை அழிந்து மனதில் அமைதி உண்டாகும்.

படிப்பில் அதிகளவு ஈடுபாடு ஏற்பட்டு கல்வி ஞானம் பெருகும்.

விடுகளில் பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்

என்றும் பணப்பிரச்சனை இன்றி நிலைத்த செல்வம் அமையும்.

வறுமையில் உள்ளவர்களுக்கு வறுமை இல்லாத நிலை மாறும்.

பெரிய பெரிய மகான்களின் ஆசி கிடைக்கும்.

விட்டில் உள்ள தானியங்கள் அதிகமாக பெருகி தானிய விருத்தி ஏற்படும்.

பிறரிடம் பேசும் போது பேச்சில் வாக்கு சாதுரியம் உண்டாகும்.

தொடர்ந்து வம்சவழியான வம்ச விருத்தி ஏற்படும்.

பணிகளில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.

நீண்ட நாட்களான புதியதாக வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு வாகன வசதிகள் அமையும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.

புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதுன்பங்கள் நீங்க எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Next articleஆயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் இது என்ன தெரியுமா? காரணம் தெரிந்தால் அதிர்ந்து போயிடுவீங்க!