மகர ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0

மகர ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

பொதுப்பலன்கள் : ராசிக்கு 4 – ம் வீட்டில் இந்தப் பிலவப் புத்தாண்டு பிறப்பதால் நன்மை அதிக அளவில் நடைபெறும். பிரச்னைகள் அதிகரிக்கும் செயல்பட முடியாமல் தவித்தீர்களே… அந்த நிலைமை மாறும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். அதே வேளை தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. கோபம் விலகும். மனதில் அமைதி பிறக்கும். பல வழிகளிலும் பணம் வந்து உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால் செலவுகளும் வரிசை கட்டும். பழைய நிகழ்வுகளை எண்ணி வருத்தப்படுவதை விட்டுவிடுங்கள். திடீர் பயணங்களும் அதனால் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

பிள்ளைகள் நல்ல முறையில் நடந்துகொள்வார்கள். பையனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெண்ணுக்கு தடைப்பட்டிருந்த கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முன்னேறறம் தரும். சித்திரை, ஆனி, ஆவணி மாதங்களில் சிறப்பாக கல்யாணத்தை முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உடன் பிறந்தோருக்கு உதவுவீர்கள்.

அலைச்சல், செலவுகள் வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். ஆடி மாதம் மட்டும் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. அதேபோன்று வாகனத்தில் செல்லும்போதும் கூடுதல் கவனம் தேவை.

புரட்டாசி மாதத்தில் இருந்து மகிழ்ச்சி தங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வழக்குகளில் நிதானம் தேவை. மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பழகியவர்களுக்குக் கூட ஜாமீன் கேரெண்டர் கையெழுத்திட வேண்டாம். வாயுத் தொந்தரவு, தலை சுற்றல் வந்து போகும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்த்து கீரை, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்து, நிலம், வீடு வாங்குவது – விற்பதில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீடு வாகனத்தை மாற்றுவீர்கள். மறைமுக எதிரிகளை வீழ்த்துவீர்கள். அக்கம், பக்கத்தாருடன் அளவாகப் பழுகுங்கள்.

பிலவ ஆண்டில் குருபகவான் சஞ்சாரம் எப்படி இருக்கும் : 14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி வருடம் முடியும் 2 – ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கணவன் – மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

படித்து, பட்டம் வாங்கியும் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலையில்லாமல் திண்டாடினீர்களே! புது வேலை அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

அதேவேளை, 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு உங்கள் ராசிக்குள்ளே அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி, வஸ்துக்களைத் தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள்.

ராகு – கேது இந்த ஆண்டு சாதகமா அல்லது பாதகமா : 20.3.2022 வரை கேது 11 – ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தயக்கம் தடுமாற்றம் நீங்கும். ஆன்மிகச் சான்றோர்கள் அறிமுகமாவார்கள். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்த பிரச்னைகளுக்கெல்லாம் இப்பொழுது தீர்வு கிடைக்கும். குடும்பத்தாருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்றே நாள்கள் நகர்ந்ததே, இனி பாசம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

21.3.2022 முதல் வருடம் முடியும் வரை 4-ல் ராகு நுழைவதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டிற்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், வேலைச்சுமை, அதிருப்தி வந்து நீங்கும்.

ஜன்ம சனி இந்த ஆண்டு என்ன பலன்கள் தருவார் : ஆண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புது மனை புகுவீர்கள். என்றாலும் ஜன்ம சனியாகத் தொடர்வதால் உடல் நலனில் அதிக அக்கறை தேவை. வாயுப் பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்து செல்லும். வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள்.

வியாபாரம் எப்படி இருக்கும் : அனுபவப் பூர்வமாக நல்ல முடிவு எடுப்பீர்கள். போட்டிகள் அதிகரிகத்தாலும், லாபம் குறையாது. வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். புதிய வேலையாட்கள் வந்து சேருவார்கள். எலெக்ட்ரிக்கல், மருந்து, உணவு வகைகளில் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துப் போவது நல்லது. பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும்.

உத்தியோகம் எப்படி இருக்கும் : புதுப் பொறுப்புகள் தேடி வரும். எப்போதும் ஏதாவது ஒரு குறையைக் கண்டு பிடித்து, உங்களை டென்ஷன் படுத்திய உயர் அதிகாரிகளின் போக்கு மாறும். பாராட்டு கிடைக்கும். சம்பள – பதவி உயர்வு உண்டு. சக – ஊழியர்களிடையே இருந்து வந்த கசப்பு உணர்வு மாறும். கலைத்துறையினரின் கற்பனைத் திறனுக்கு மதிப்பு -மரியாதை கூடும். மூத்த கலைஞர்களின் அன்பைப் பெறுவார்கள். உங்களின் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பாராட்டப்படும். சம்பளம் உயரும்.

இந்த வருடம் உங்களைத் தெளிவு படுத்துவதுடன், இழுபறியாக இருந்த வேலைகளை வெற்றிகரமாக முடித்துத் தருவதாக அமையும்.

பரிகாரம் என்ன : சென்னை- சோழிங்கநல்லூர் ஸ்ரீப்ரத்யங்கரா தேவியை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் உள்ள துர்கை அம்மன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுங்கள். இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 15.04.2021 Today Rasi Palan 15-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleகும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!