மகரம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!

0

உங்கள் ராசிக்கு 12, 1-ல் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் மன நிம்மதி குறைவுகள், வீண் செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு கெடுதியை குறைக்கும்.

சந்திராஷ்டமம் -10-01-2023 காலை 09.00 மணி முதல் 12-01-2023 இரவு 09.00 மணி வரை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகும்பம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!
Next articleதனுசு ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!