மகன்கள் முன்னிலையில், சொந்த மகளை சீரழித்த சைக்கோ தந்தை! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

0
384

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவம்பாளையத்தை சார்ந்தவன் பாலசுப்பிரமணி (வயது 52). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். இவருக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக இவரது மனைவி உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.

இந்த நிலையில், மனைவி இறந்த பின்னர் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று, அங்குள்ள தனியார் விடுதியில் மூவரை சேர்த்து, அவ்வப்போது சென்று பார்த்து வந்துள்ளான். இந்த நிலையில், கடந்த 2014 ம் வருடத்தில் தனது குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றுள்ளான். பின்னர் சுமார் இரண்டு நாட்கள் கழித்து அனைவரையும் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றுள்ளான்.

விடுதிக்கு வந்த நேரத்தில் இருந்து அவரின் மகள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார், இதனை கண்ட விடுதி நிர்வாகிகள் அவரை அழைத்து விசாரணை செய்ததில், கோவிலுக்கு செல்வதாக கூறி மகன் மற்றும் மகளை அழைத்து சென்ற நிலையில், திருப்பூரில் இருக்கும் பகுதியில் மது போதையில் சரக்கு ஆட்டோவில் வைத்து சொந்த மகளை, இரண்டு மகன்கள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியது தெரியவந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட சமயத்தில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மகளீர் காவல் நிலையத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜெயந்தி, சொந்த மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவங்கியிலிருந்து வந்த போன் கால்! தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த தாய், மகள்!
Next articleவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!