பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம்! முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
1788

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காரசின் பண்ணை வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக ஆணுறைகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதன் பின் அந்த கும்பலிடம் பெண் ஒருவர் சிக்கி, அவர்களிடம் அண்ணா எங்கள விட்டுடங்க என்று கெஞ்சிய வீடியோ வெளியாகி தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால் இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும், அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று மக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு என்பவரின் பண்ணை வீட்டில் பொலிசார் அதிரடியாக சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதன் படிபொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 14-வது கிலோ மீற்றரில் சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது.

இந்த பண்ணை வீட்டில் திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட பொலிசார் நேற்று மாலை 4 மணியளவில் அந்த பண்னை வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்களை பொலிசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டுக்குள் ஏராளமான ஆணுறைகள் வாங்கி வைத்திருந்தனர். வீட்டை சுற்றிலும் ஏராளமான ஆணுறைகள் இருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், சோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த பொலிசார் எந்த தகவல்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் நடேசனிடம் கேட்டபோது, இது வழக்கமான சோதனை தான், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இது குறித்து ஏதும் சொல்ல முடியாது என்று கூறி முடித்துள்ளார்.

இதே போல் திருநாவுக்கரசின் கூட்டாளிகளில் ஒருவரான சதீஸ் என்பவருடைய தந்தை பொள்ளாச்சி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையிலும் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎன் கணவர் எப்படிப்பட்டவர்! பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் மனைவி பரபரப்பு பேட்டி!
Next articleபொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தை போட்டுடைத்த நக்கீரன் கோபாலுக்கு எதிர்ப்பு! ஆத்தே இது என்ன வம்பு!