பேஸ்புக்கின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக பேஸ்புக் நிறுவனர் கூறும் ரகசியம் என்ன!

0
467

தன் வீரத்தின் மூலம் உலகம் முழுவதையும் அடிமைப்படுத்த எத்தனையோ அரசர்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் முயன்றார்கள். ஆனால் எந்த அரசனாலும் அதனை செய்ய இயலவில்லை. ஆனால் ஒரு இளைஞன் தன் புத்திகூர்மையின் மூலம் உலகம் முழுவதையும் தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டான். அது யார் என்று நாங்கள் சொல்லிதான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்தான் பேஸ்புகை கண்டுபிடித்த மார்க் ஜுக்கர்பேர்க்.

மிகக்குறுகிய காலகட்டத்தில் மார்க் ஜுக்கர்பேர்க் அடைந்திருக்கும் இந்த வளர்ச்சி என்பது கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாதது. இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடத்திற்குள் வர மார்க் ஜுக்கர்பேர்க் எவ்வளவு உழைத்திருப்பார் என்று நாம் யோசித்து பார்த்திருக்கிறோமா? அவரின் கண்டுபிடிப்பை உள்ளங்கையில் வைத்து அனுதினமும் பார்க்கும் நாம் அதற்கு அவர் எடுத்த விடாமுயற்சி, அர்ப்பணிப்பு போன்றவற்றை நினைத்து பார்ப்பதே இல்லை. தன் வாழ்க்கையின் வெற்றி ரகசியமாக மார்க் ஜுக்கர்பேர்க் கூறுவது என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.

ரகசியம் 1
” Move fast and break things. Unless you are breaking stuff you are not moving fast enough ”
வேகமாக முன்னேறி தடைகளை உடை. நீ தடைகளை உடைக்கும் வரை நீ வேகமாக முன்னேறவில்லை என்று அர்த்தம்.

ரகசியம் 2
” I mean, the real story is actually pretty boring, right? I mean, we just sat at our computers for six years and code ”
உண்மையில் எங்கள் கதை மிகவும் போர் அடிக்கும். அதாவது நாங்கள் செய்தது என்னெவெனில் 6 ஆண்டுகள் கணினி முன் உட்கார்ந்து கோடிங் மட்டும் எழுதிக்கொண்டிருந்தோம். ஆறு வருட கடின உழைப்பே இப்பொழுது மார்க் ஜுக்கர்பேர்கை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்துள்ளது.

ரகசியம் 3
” People don’t care about what you say, they care about what you build ”
மக்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை கவனிக்க மாட்டார்கள், அவர்கள் கவனிப்பது நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பத்தைத்தான்.

ரகசியம் 4
” I think a simple rule of business is, if you do the things that are easier first, then you can actually make a lot of progress ” நான் வணிகத்திற்கு ஏற்றதாக நினைப்பது என்னவெனில், நீங்கள் எளிதான காரியங்களை முதலில் செய்து முடித்துவிட்டால் நீங்கள் அதிக வளர்ச்சியை உருவாக்கலாம்.

ரகசியம் 5
“The biggest risk is not taking any risk. In a world that is changing really quickly, the only strategy that is guaranteed to fail is not taking risks ”
உலகில் மிகவும் ரிஸ்க்கான விஷயம் யாதெனில், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பதுதான். . மிக விரைவாக மாறும் ஒரு உலகில், உங்கள் தோல்விக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒன்று என்னவெனில் அது ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்.

ரகசியம் 6
” If you just work on stuff that you like and you’re passionate about, you don’t have to have a master plan with how things will play out ”
நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்த வேலையில் ஆர்வத்துடன் பணியாற்றினால், காரியங்கள் எப்படி நடக்கும் என்ற கவலையே உங்களுக்கு தேவையில்லை.

ரகசியம் 7
” People can be really smart or have skills that are directly applicable, but if they don’t really believe in it, then they are not going to really work hard ”
மக்கள் அனைவருமே புத்திசாலி மற்றும் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்கள் அதனை நம்பவில்லை எனில் அவர்களால் எப்பொழுதுமே கடினமாய் உழைக்க இயலாது.

ரகசியம் 8
” Don’t let anyone tell you to change who you are ”
இது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் யார் என்பதையும், உங்களின் உண்மையான குணத்தையும் மற்றவர்கள் மாற்றிக்கொள்ளும்படி கூற அனுமதிக்காதீர்கள்.

ரகசியம் 9
” Instead of building walls, we can help build bridge ”
சுவர்களை கட்டுவதற்கு பதிலாக, நாம் பாலங்களை கட்டுவோம். சுவர்கள் கட்டி நாம் தனிமையில் வாழ்வதை விட பாலங்களை கட்டி அனைவரும் இணைந்து வாழ்வோம்.

ரகசியம் 10
” Nothing influences people more than a recommendation from a trusted friend ”
நம்பிக்கைகுரிய நண்பனிடம் இருந்து பரிந்துறையை விட வேறு எதுவும் நம்மிடம் அதிக செல்வாக்கை பெற இயலாது.

ரகசியம் 11
” By giving people the power to share, we’re making the world more transparent ”
மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் சக்தியை கொடுப்பதன் மூலம், நாம் இந்த உலகத்தை வெளிப்படையாக்கி கொண்டிருக்குகிறோம்.

ரகசியம் 12
” Advertising works most effectively when it’s in line with what people are already trying to do ”
மக்கள் ஏற்கனவே செய்ய முயற்சிப்பதற்கு ஏற்றவாறு அவை தொடர்பான விளம்பரங்கள் செய்வது அதிக பலனை கொடுக்கும்.

ரகசியம் 13
” The question isn’t, ‘What do we want to know about people?’ It’s, ‘What do people want to tell about themselves ”
கேள்வி என்னவெனில். நாம் மக்களை பற்றி என்ன தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை, மக்கள் அவர்களை பற்றி என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதுதான்.

ரகசியம் 14
” We look for people who are passionate about something. In a way, it almost doesn’t matter what you’re passionate about ”
நாங்கள் தேடுவது ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களைத்தான். அவர்கள் எந்த விஷயத்தில் ஆர்வமாய் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.

ரகசியம் 15
” You don’t let people deter you. That’s how you do it ”
மற்றவர்கள் உங்களை தடுக்க நீங்கள் எப்பொழுதும் அனுமதிக்க மாட்டிர்கள். அதனை நீங்களேதான் செய்து கொள்கிறீர்கள்.

ரகசியம் 16
” It is important for young entrepreneurs to be adequately self-aware to know what they do not know ”
இளம் தொழில் அதிபர்கள் அவர்களுக்கு என்ன தெரியாது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ரகசியம் 17
” My goal was never to just create a company. It was to build something that actually makes a really big change in the world ”
எனது குறிக்கோள் எப்பொழுதும் ஒரே கம்பெனியை தொடங்குவதாக இருந்ததில்லை. உண்மையில் உலகில் உண்மையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

ரகசியம் 18
” Books allow you to fully explore a topic and immerse yourself in a deeper way than most media today ”
மற்ற மீடியா தொழில்நுட்பங்களை காட்டிலும் புத்தகங்கள் ஒரு தலைப்பை பற்றி நன்கு அறிந்துகொள்ளவும் அதைபற்றிய ஆழமான தகவல்களை அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

ரகசியம் 19
” It takes courage to choose hope over fear ”
பயத்தை தாண்டி நாம் நம்பும் விஷத்தை தேர்வு செய்ய தைரியம் நிச்சயம் வேண்டும்.

ரகசியம் 20
” Some people dream of success, while others wake up and work hard at it ”
சிலர் வெற்றியை பற்றி கனவு கண்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில், மற்றவர்கள் எழுந்து அதற்காக கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: