பேரறிவாளன் கேட்ட கேள்வி! பல போராட்டங்களுக்கு பின் அவருக்கு கிடைத்த பதில்! மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா!

0
379

பேரறிவாளக் கேட்ட கேள்விக்கு இந்தி நடிகர் சஞ்சய் தத் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டார் என ஆர்.டி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆயுத தடைச்சட்டத்தின் தண்டனை விதிக்கப்பட்டது. 6ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனையில் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட நிலையில், தண்டனை காலம் முடிவடையும் முன் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், எந்த அடிப்படையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என இந்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புனே எரவாடா சிறை நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் கோரினார்.

ஆனால் அவருக்கு,தகவல்கள் எதும் அளிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அவர், மேல்முறையீடும் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு புனே தகவல் ஆணையம் முன்பு விசாரணை நடந்தது.

அப்போது, தனது விடுதலை தொடர்பான தகவல்களை பேரறிவாளனுக்கு அளிக்கக்கூடாது என எரவாடா சிறை நிர்வாகத்துக்கு சஞ்சய் தத் கடிதம் எழுதியிருப்பதாக கூறிய சிறை அதிகாரி, அந்த கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பேரறிவாளன் தரப்பு வக்கீல் நிலே‌ஷ் உகே, ஒரு தண்டனை கைதிதான் மாநில அரசை வழிநடத்துவாரா..? என கேள்விகள் எழுப்பினார்.

இதனை அடுத்து, இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத் விடுதலை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பேரறிவாளன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு உள்ளது.

இந்த பதிலில், நடிகர் சஞ்சய் தத் மகாராஷ்டிர அரசால் விடுதலை செய்யப்பட்டார். அவரை விடுவிப்பது பற்றி மத்திய அரசுடன் எவ்வித அதிகாரப்பூர்வ தொடர்பும் இல்லை என எரவாடா சிறை நிர்வாகம் தெரிவித்துள்து.

இந்நிலையில், பேரறிவாளனை விடுவிப்பது பற்றி தமிழக முதல் அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமனைவியை விவாகரத்து செய்துவிட்டு! பிரபல விளையாட்டு வீராங்கனையுடன் ஊர் சுற்றும் விஷ்ணு!
Next articleஸ்டெம்பை தெறிக்க விட்ட யார்க்கர் மன்னன் மலிங்கா! இலங்கை அணி வெற்றி பெற்ற தருணத்தின் வீடியோ!