பெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்!

0

உலகின் ஆகப்பெரிய சக்தி என்றால் அது பெண்தான். உலகின் மக்கள்தொகையில் பெண்கள் சரிபாதி இருந்தாலும் உரிமைகளில் சரிபாதி என்பது இன்னும் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டிலேயே பெண்களுக்கு இந்த நிலைதான் என்றால் கடந்த நூற்றாண்டையும் , அதற்கு முந்தைய தலைமுறையை பற்றியும் சற்று சிந்தித்து பாருங்கள்.

பாரத மாதாவாக பெண்களை போற்றும் இந்தியாவிலேயே இன்னும் பெண்ணடிமைத்தனமும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பெண்களை அடிமையாகவே வைத்திருக்கும் நாடுகளில் அவர்களின் நிலைஇப்படி இருக்கும். பண்டைய காலத்தில் சமூகத்தின் அடக்குமுறையையும் மீறி சாதித்த பெண்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்தனர். இந்த பதிவில் உங்களை ஆச்சரிப்படுத்தும் பெண்களை பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.

ஓட்டுரிமை
பல பெண்கள் நாட்டின் அதிபர்களாகவும், பிரதமர்களாகவும் கோலாச்சி கொண்டிருக்கும் இந்த காலத்தில் கூட இன்னும் சில நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டுதான் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கிய நாடு நியூசிலாந்துதான்.

1893 ஆம் ஆண்டுதான் பெண்கள் முதன் முதலாக தன்னை ஆளவேண்டியவர்கள் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை பெற்றார்கள். அதனை தொடர்ந்தே மற்ற நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஆரம்பித்தார்கள். இந்த வரிசையில் கடைசியாக இருப்பது சவூதி அரேபியா. அங்கு 2015ஆம் ஆண்டுதான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

முதல் எழுத்தாளர்
ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்த எழுத்து துறையில் பெண்கள் காலடி வைக்க கிட்ட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் மேலானது. 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜப்பானிய பெண் எழுத்தாளரான மொரக்க்ஷி ஷிகிபு தனது நாவலான ” தி டேல் ஆப் ஜென்ஜி ” என்னும் நூலை வெளியிட்டார். இவர்தான் உலகின் முதல் பெண் எழுத்தாளர் மற்றும் இந்த புத்தகம்தான் பெண் எழுதிய முதல் முழுநாவல்.

பெண்களின் ஆயுள்
உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பொதுவாக இருக்கும் ஒரு உண்மை என்னவெனில் பெண்களின் ஆயுள்காலமானது எப்போதும் ஆண்களை விட அதிகமாக இருப்பதுதான். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி பெண்களின் சராசரி ஆயுள்காலம் 73.8 வருடம் அதேசமயம் ஆண்களின் ஆயுள்காலம் 69.1 வருடம்தான்.

வீனஸ் கை கண்ணாடி
பெண்களின் உயிரியல் அறிகுறியாக கருதப்படுவது ஒரு வட்டமும் அதற்கு கீழே ஒரு கூட்டல் அறிகுறியும்தான். இதன் அர்த்தம் பலருக்கும் தெரியாத ஒன்று. ரோமானியர்கள் வழிபட்ட பெண் கடவுள்தான் வீனஸ். அவர் கையில் வைத்திருந்த கை கண்ணாடிதான் பெண்களின் உயிரியில் அடையாளமாக கருதப்படுகிறது.

பெண் கிரகம்
நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் ஆண்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளது. ஒன்றை தவிர, அதுதான் வீனஸ். இந்த ஒரு கிரகம் மட்டுமே பெண்ணின் பெயரை கொண்டு இன்றளவும் அழைக்கப்படுகிறது.

பெண்கள் உலகத்தின் துயரம்
பெண்களின் வாழ்வு எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததோ அதேஅளவு துயரமும் நிறைந்தது. பெண்கள் வாழ்வில் தாய்மை மிகவும் முக்கியமான ஒன்று. பிரசவ வலியை தாங்கும் வலிமை ஆண்களுக்கு இல்லை என்றுதான் என்னவோ கடவும் ஆண்களுக்கு அதை வழங்கவில்லை. சமீபத்திய ஆய்வுகளின் படி ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 1600 பெண்கள் உலகம் முழுவதும் பிரசவத்தின்போது மரணிப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில்தான் இது அதிகம் நிகழ்கிறது.

முதல் பெண் மருத்துவர்
இன்று மருத்துவ துறையில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும் உலகின் முதல் பெண் மருத்துவர் வாழ்ந்த காலம் என்பது 2700 BC என்று கூறப்படுகிறது. எகிப்தை சேர்ந்த மெரிட் ப்தா என்ற பெண்தான் உலகின் முதல் பெண் மருத்துவர் என்று வரலாறு கூறுகிறது.

வியர்வை அழகு குறிப்பு
க்ளாடியேட்டர்கள் என்பவர்கள் பண்டைய ரோமக்காலத்தில் வாழ்ந்த மாவீரர்கள் ஆவர். பண்டைய ரோம் பெண்கள் தங்களின் அழகுக்காக க்ளாடியேட்டர்களின் வியர்வையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வியர்வை பெண்களை உண்மையிலேயே அழகாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அறிவுக்கூர்மை
உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளாக கருதப்படும் இரண்டு பெண்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். காஷ்மியா வாஹி மற்றும் அனுஷ்கா பினாய் இடஙக இரண்டு பெண்களின் IQ அளவும் 162 ஆகும். உலகின் மிகச்சிறந்த மற்றும் புத்திரகூர்மை மிகுந்த விஞ்ஞானிகளாக கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் IQ அளவு 160 ஆகும். இதுதான் உலகின் மிகஅதிக IQ என்று கருதப்பட்டு வந்தது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉலகிலேயே சுத்தமான தமிழ் பேசும் மக்கள் யார் தெரியுமா! இலங்கையில் திரைப்பட பிரபலம் வெளியிட்ட அதிரடி!
Next articleபற்கள் விழுந்தது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் ! உங்கள் பற்கள் விழுவது மாதிரி கனவு கண்டால் என்ன நடக்கும் !