புலம்பும் சூப்பர் சிங்கர் வெற்றியாளர், எனக்கு அந்த இடம் கிடைத்தது வருத்தமாக இருக்கிறது!

0

புலம்பும் சூப்பர் சிங்கர் வெற்றியாளர், எனக்கு அந்த இடம் கிடைத்தது வருத்தமாக இருக்கிறது!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய பல வெளிப்படுத்தினார்கள். மேலும், இந்த வருடம் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி வேற லெவல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் லண்டனில் இருந்து வந்த ஒரு தமிழ் பாடகர் புண்ணியா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும்,இவர் லண்டனில் நடைபெறும் அந்தி மலை நிகழ்வின் மூலம் புகழ்பெற்ற பாடகராக அறிமுகமானார். பின் இந்தியாவில் தன்னுடைய இசைப்பயணத்தை தொடங்கினார்.

மேலும், இவருக்கு சிறு வயதிலிருந்தே பாடலின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் எப்படியாவது தன்னுடைய இசைத் திறமையை உலகிற்கு காட்ட வேண்டும் என்று தான் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையால் பல பாடல்களைப் பாடி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் லண்டனில் மருத்துவப் படிப்பு படித்திருந்தார். ஆகவே இசைக்காகவே இவர் தன்னுடைய படிப்பையும் விட்டுட்டு இந்தியா வந்தார். இந்நிலையில் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் முதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சூப்பர் சிங்கர் 7ல் இறுதிச்சுற்றுக்கு விக்ரம், புண்ணியா, முருகன், சாம் விஷால் மற்றும் கவுதம் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கடந்த நவம்பர் 10ஆம் தேதி கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மேலும், இதில் மூக்குத்தி முருகன் முதல் பரிசை தட்டிச் சென்றார். அதுவும் மணிரத்னம் படத்தில். வைரலாகும் புகைப்படம். அவருக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீடு வீடு பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே கூறியது போல் வெற்றியாளராக வரும் ஒரு நபருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இரண்டாவது பரிசு விக்ரமுக்கு கிடைத்தது. அவருக்கு 25 இலட்சம் மதிப்புள்ள வைர நகை பரிசாக அளித்தார்கள். மூன்றாம் பரிசு சாம் விஷால் மற்றும் புண்ணியா இருவருக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.மேலும் புண்ணியாவுக்கு முதல் பரிசு கொடுக்காததற்கு பல கருத்துக்களும் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் புண்ணியா அவர்களிடம் நேர்காணல் ஒன்று நடைபெற்றது. அதில் புண்ணியா உங்களுக்கு மூன்றாவது இடம் கொடுத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் கூறியது, முதலில் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் இதை எதிர்பார்க்கவில்லை.

மேலும், ஒரு கட்டத்தில் இது மக்களின் தீர்ப்பு தானே என்று நினைத்து நான் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். மேலும், நான் முதலில் இந்தியாவிற்கு வந்தது என்னுடைய இசைத் திறமையை மக்களுக்கு காட்ட வேண்டும் என்று தான். அதை நான் முழுமனதாக காண்பித்துவிட்டேன். அதோடு இறுதிச்சுற்றுக்கு தேர்வாவதே வெற்றி தானே. அதிலும் நான் ஜெயித்து விட்டேன். அது மட்டுமில்லாமல் கோடிக்கணக்கான மக்களின் முன்னால் பாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது நினைத்து மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதுவே என்னுடைய முதல் வெற்றி தான். மேலும்,அணிருத் சார் அவருடைய இசையில் பாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது நினைத்து எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று கூறினார். இதோடு அந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார் புண்ணியா.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரலாகும் புகைப்படங்கள், கேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க!
Next articleவைரலாகும் புகைப்படம், விஐபி அமுல் பேபிக்கு அடித்த லக். அதுவும் மணிரத்னம் படத்தில்!